பீகார் போல தமிழகத்தில் தேர்தலா? அலறும் ஸ்டாலின்... தேர்தல் ஆணையத்தில் திமுக அவசர கோரிக்கை..!

By vinoth kumarFirst Published Dec 2, 2020, 12:52 PM IST
Highlights

தபால் ஓட்டு முறையில், அதிக அளவு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால் அதை கைவிடும்படி தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக கோரிக்கை வைத்துள்ளது.

தபால் ஓட்டு முறையில், அதிக அளவு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால் அதை கைவிடும்படி தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக கோரிக்கை வைத்துள்ளது.

டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்திருந்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனுவை அளித்தார். அதில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், நேரடியாக தேர்தலில் ஓட்டளிக்கும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது, இந்த நடைமுறைக்கு பதிலாக, அவர்களுக்காக, தபால் ஓட்டு போடும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அமலுக்கு வந்த இந்த நடைமுறையை, தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் பின்பற்ற, தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இது, நேர்மையாக ஓட்டளிக்கும் முறைக்கு எதிரானது. கள்ள ஓட்டுகள் போடுவதற்கே வழிவகுக்கும். முறைகேடான வழிகளுக்கு, நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்பதால், இந்த தபால் ஓட்டுமுறையை கைவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.பாலு;- ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது, ஏற்கனவே விமர்சனங்கள் உள்ளன. இயந்திரங்கள் குறித்து, ஒவ்வொரு தேர்தலிலும், அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதாக, புகார்கள் வருகின்றன. இந்நிலையில், தபால் ஓட்டு முறையை அமல்படுத்துவதன் வாயிலாக, மேலும் பல முறைகேடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். 

click me!