பரபரன்னு பட்டையை கிளப்பும் முதல் கட்ட சர்வே முடிவுகள்: நாற்பதிலும் அடிச்சு தூக்கப்போவது யாரு? தளபதி ஸ்டாலினா இல்ல கொங்கு தங்கம் எடப்பாடியாரா!

By Vishnu PriyaFirst Published Mar 12, 2019, 6:57 PM IST
Highlights

மில்லியன் டாலர் கொஸ்டீன்! என்பார்களே, இன்றைய தேதிக்கு அது ‘தமிழகம் மற்றும் புதுவையில் நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளில் வெல்லப்போவது அ.தி.மு.க. கூட்டணியா இல்லை தி.மு.க. கூட்டணியா?’ என்பதுதான். 
 

மில்லியன் டாலர் கொஸ்டீன்! என்பார்களே, இன்றைய தேதிக்கு அது ‘தமிழகம் மற்றும் புதுவையில் நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளில் வெல்லப்போவது அ.தி.மு.க. கூட்டணியா இல்லை தி.மு.க. கூட்டணியா?’ என்பதுதான். 

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டு தரப்பிலும் கூட்டணிகள் இறுதியாகி, உறுதியாகி தொகுதி பங்கீடும் முழுமையாக முடிந்துவிட்டது. இதோ நாளையிலிருந்தே எந்த தொகுதிகள் யார் யாருக்கு, எங்கே யார் வேட்பாளர்? எனும் தகவல்களை இரண்டு முகாம்களில் இருந்தும் எதிர்பார்க்கலாம். 

சூழ்நிலை இப்படி இருக்கும் நிலையில், முந்திக்கொண்டு சில சர்வேக்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் ஏனோ இன்னமும் வெளியிடப்படாத நிலையில், நெடுநாட்களாக அரசியல் விமர்சகர் மற்றும்  பார்வையாளராக இருக்கும் நபர்கள் ரேண்டமாக  நாற்பது தொகுதிகளையும் வலம் வந்தும், தங்களது நெட்வொர்க்கினை வைத்து சர்வே நடத்தியும், உளவுத்துறை காவலர்களின் வழியே தகவல் பெற்றும் சில முடிவுகளுக்கு வந்துள்ளனர். 

அவர்களில் இருவரின் முடிவுகள் வெளியே வந்துள்ளன. ஒருவர் சுமந்த் சி.ராமன் மற்றொருவர் சீனியர் பத்திரிக்கையாளரான ஷ்யாம். இரண்டு பேரின் கருத்துக்கள் இதோ...

“எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள், யார் வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கைகள் உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் உடைபடும் முன்னர், அந்தந்த கட்சிகள் மீது மக்கள் வைத்திருக்கும் தற்போதைய கருத்துக்களின் அடிப்படையில் பேசலாம்...

தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதம் அக்கட்சிக்கு பலம் என்றாலும், அது அப்படியே தேர்தலில்  கிடைக்குமா? என்பது டவுட். அ.தி.மு.க. வழக்கம்போ இப்பவும் கொங்கு மண்டலத்தை தன் கோட்டையாக வைத்துள்ளது. பா.ம.க.வின் செல்வாக்கு அக்கட்சிக்கு வலுதான். ஆனாலும் கடந்த சட்டசபை ந்தேர்தலில் தி.மு.க. வானது வடமாவட்டங்களில் பெரும் கணிசமான தொகுதிகளை பெற்றுள்ளதை கவனிக்க. கஜா பிரச்னையால் டெல்டாவில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அதிகமாகி இருக்கிறது காரணம் பி.ஜே.பி. மீதுள்ள கோபம். அதேவேளையில் இரட்டை இலை மீதான பாசம் குறையவில்லையே.

 மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவும், தெற்கு உள்ளிட்ட பிற இடங்களில் தி.மு.க.வும்  ஆதிக்கமாய் இருக்கிறது.” என்கிறார்.  இவரது பேச்சு அ.தி.மு.க.வின் கை ஓங்கியிருப்பது போன்ற நிலை உருவாகியுள்ளது என்று சொல்வதாய் இருந்தாலும், அதை வெளிப்படையாய் உணர்த்தவில்லை. 

ஆனால் ஷ்யாமோ...”அ.தி.மு.க. வின் கூட்டணியில் தூண்களாக நினைக்கப்படும் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கி சரிந்து கிடப்பதை கவனியுங்கள். பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலை மாநிலம் முழுவதுமே உள்ளது. இதனால் அக்கட்சி மூலம் மாநிலத்தை ஆளும் கட்சிக்கு பெரிய பலம் ஏற்பட வாய்ப்பில்லை. 

போதாக்குறைக்கு தினகரனும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை உடைக்கிறார்.  இது போக சமூக ஊடகங்களின் வழியே அரசியை கற்கிற முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர் பட்டாளத்தின் வாக்கு வங்கி யாருக்கு போகப்போகிறது? நோட்டாவுக்கா! இல்லை இரண்டு அணிகளில் ஒன்றுக்கா? என்பது மிக முக்கியம்.” என்கிறார். 
காத்திருப்போம் அடுத்த ரவுண்டு முடிவுக்கு.

click me!