தேர்தல் ரிசல்ட் வர லேட்டாயிடும்... பதறும் திமுக செந்தில் பாலாஜி..!

By Thiraviaraj RMFirst Published Apr 20, 2021, 5:38 PM IST
Highlights

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு மையத்தில், குளிரூட்டும்பெட்டி இயங்கிக் கொண்டிருந்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார்.
 

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு மையத்தில், குளிரூட்டும்பெட்டி இயங்கிக் கொண்டிருந்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார்.

தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வோட்டிங் மெஷினும் 3 அடுக்கு பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வோட்டிங் மெஷின் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சில குளறுபடிகள் நடப்பதாக அவ்வப்போது திமுகவினர் புகார் கூறி வருகின்றனர். அதே வரிசையில் தற்போது கரூர் தொகுதி திமுக வேட்பாளரும் புதிய புகார் தெரிவித்துள்ளார்.

கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவரை 3 அடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதைதவிர பல்வேறு கட்சியினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கல்லூரி வளாகத்தில் ஒரு பூட்டப்பட்ட அறையில், நேற்று ஏசி இயங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சர்வர்களும் செயல்பாட்டில் இருந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து திமுகவினர் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பிரசாந்த் மு.வடநேரேவுக்கும் தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கல்லூரி வகுப்புகள் முடிந்து ஏசி இயந்திரம் மற்றும் சர்வர்கள் அணைக்கப்படாமல் போனதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விஷயம் குறித்து கேள்வி பட்டதும் சம்பவ இடம் விரைந்த செந்தில் பாலாஜி, அங்கு ஆய்வு செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “காலேஜ் 2 நாள் லீவு. எல்லா ரூமும் பூட்டியிருக்கு. ஆனால், பூட்டப்பட்ட ரூமில் ஏசி ஓடுது. சர்வர்கள் ஆன் ஆகி இருக்கு. இயக்கத்தில் இதைபற்றி விளக்கம் தந்தார்கள். ஆனால் திருப்தியாக இல்லை. வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறைகள் உள்ள வளாகத்தில், லேப்டாப், வைஃபை, கம்ப்யூட்டர் பாகங்கள் கொண்டு வருவதற்கும் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதிக்கவேண்டும். இந்த தொகுதியில் மொத்தம் 355 வாக்கு சாவடிகள் இருக்கின்றன. ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியவே எப்படியும் 45 நிமிஷமாகும். அப்படி பார்த்தால் 77 வாக்குசாவடிகளுக்கும் எண்ணி முடிக்க நடுராத்திரி ஆகிவிடும். அதனால், 28 மேசைகளை போட்டு வாக்கு எண்ணிக்கையை விரைவாக நடத்தவேண்டும். இதுகுறித்து ஆட்சியரிடமும் தெரிவித்துள்ளோம்” என்றார்.

click me!