போலியோ மருந்து வாங்க காசில்லை! ஆனா தேர்தலுக்கு மட்டும் பல்லைக் காட்டுது கஜானா!

By Vishnu PriyaFirst Published Mar 29, 2019, 6:27 PM IST
Highlights

ஏழைகளுக்கு தரும் நிதியுதவியை தடுக்கும் ஒரே கட்சி தி.மு.க.தான்: எடப்பாடி பழனிசாமி. (அவங்க என்னமோ சொல்லிட்டு போகட்டும் தல. ஆனா, போலியோ சொட்டு மருந்து வாங்க கூட நிதியில்லாம கெடக்குற கருவூலம், தேர்தல் நேரத்துல மட்டும் ஏழைங்களை பார்த்து பல்லை இளிக்க ஆரம்பிச்சிருக்கிறது என்ன மேஜிக்கு?  பணத்தை கொடுத்து ஏழைங்களை கோழைங்களாக்குறது நெருடலா இல்லையா உங்களுக்கு?)

* பிரதமர் மோடி இந்தியாவின் கதாநாயகன். இந்தியாவை பாதுகாக்கும் ‘ஸ்டண்ட் மாஸ்டர்’. இந்தியாவுக்கு பிரச்னை என்றால் அதை மல்லுக்கட்டி தடுக்கும் மல்யுத்த வீரர். சமூக விரோதிகளுக்குதான் அவர் வில்லனாக தெரிகிறார்: ராஜேந்திர பாலாஜி (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ப்பா! அண்ணே என்னதான் கூவுனாலும் இந்த பால்வளத்துறையை தாண்டி உங்களுக்கு எதுவும் கிடைக்கப் போறதில்லை. மத்தியமைச்சராகிற உங்க ஆசை புரியுது. ஆனா அதுக்கு எம்.பி.யாகணும்ணே, நீங்க எம்.எல்.ஏ.தான்.)

* இன்றைக்கு, தன் கையில் உள்ள ஸ்மார்ட் போன் மூலம் அரசியல் நிலவரங்களை தெளிவாக பார்த்து புரிந்து கொள்கின்றனர் இளைஞர்கள். அவர்களை ஏமாற்ற முடியாது: ராமதாஸ். (தெளிவு தலைவரே நீங்க. ஆனா உங்க மகன் அன்புமணி எம்.பி.யோட பிரஸ்மீட் வீடியோதான் சமீப கால அரசியல்லேயே அதிகமாக பார்த்து, ரொம்ப கேவலமாக விமர்சிக்கப்பட்ட ஒன்றுன்னு உங்களுக்கு தெரியுமா, தெரியாதா! இல்லே தெரிஞ்சுகிட்டேதான் இந்த சீன் பேச்சா!)

* ஏழைகளுக்கு தரும் நிதியுதவியை தடுக்கும் ஒரே கட்சி தி.மு.க.தான்: எடப்பாடி பழனிசாமி. (அவங்க என்னமோ சொல்லிட்டு போகட்டும் தல. ஆனா, போலியோ சொட்டு மருந்து வாங்க கூட நிதியில்லாம கெடக்குற கருவூலம், தேர்தல் நேரத்துல மட்டும் ஏழைங்களை பார்த்து பல்லை இளிக்க ஆரம்பிச்சிருக்கிறது என்ன மேஜிக்கு?  பணத்தை கொடுத்து ஏழைங்களை கோழைங்களாக்குறது நெருடலா இல்லையா உங்களுக்கு?)

* பிரதமரை சாடிஸ்ட் என்றும், தமிழக முதல்வர் இ.பி.எஸ். மீது பொய்யாக கொலைப்பழி சுமத்தியும் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற துடிக்கிறார் ஸ்டாலின். ஆனால் மக்கள் அவருக்கு தோல்வியை மட்டுமே பரிசாக கொடுப்பார்கள்: தளவாய் சுந்தரம். (இருந்துட்டு போகட்டும், ஜெயலலிதாட்ட வருத்தமிகுதியில் நீங்க சொன்ன ஒத்த வார்த்தைக்காக பல வருஷமா அரசியல்ல மேலே வரமுடியாம கிடக்குறீங்க. பிரதமர் மேடையிலேயே உங்களை கையை பிடிச்சு இழுத்து இறக்கிவிடுற நிலைமை நடக்குது. பின்னே ஏன் இந்த கூவல் எல்லாம்? )

* தி.மு.க என்னை பயன்படுத்திவிட்டு கைகழுவி விடாதா? என கேட்கிறார்கள். அதை அப்புறமா பார்த்துக்கலாம். இப்போ, அ.தி.மு.க.வை எதிர்ப்பதற்காக தி.மு.க.வை ஆதரிக்கிறேன்: ராஜகண்ணப்பன். (சபாஷ் தல. நாளைக்கு என்ன வேணா நடக்கலாம், அதை  அப்புறமா பார்த்துக்கலாம். இப்போதைக்கு என் எதிரி அ.தி.மு.க. நாளைக்கே  சூழல் மாறுச்சுன்னா அவங்க கூட சேர்ந்துகிட்டு தி.மு.க.வை எதிர்ப்பீங்க இல்லையா! நிரந்தர கொள்கையாவது, கோட்பாடாவது, சித்தாந்தமாவது?)

click me!