கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மாநில கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

By T BalamurukanFirst Published Jul 18, 2020, 7:54 AM IST
Highlights

கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது, கட்சிகளின் தேர்தல் பிரசாரம் எந்த மாதிரி முன்னெடுக்கப்படும் என நாடு முழுவதும் உள்ள கட்சிகளின் கருத்தை கேட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
 

கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது, கட்சிகளின் தேர்தல் பிரசாரம் எந்த மாதிரி முன்னெடுக்கப்படும் என நாடு முழுவதும் உள்ள கட்சிகளின் கருத்தை கேட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸதொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தவதற்காக கடந்த மார்ச் கடைசி வாரம் முதல் பல கட்டங்களாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வந்த போதிலும்,பாதிப்பு அதிகாரித்து வருவதுடன், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஊரடங்கால் பல்வேறு தொழில் நிறுவனங்கள், பொது போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைள் முடங்கியுள்ளன.

இந்த சூழ்நிலையில், இந்தாண்டு இறுதியில் சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்களையும், சில மாநிலங்களில் இடைத்தேர்தல்களையும் நடத்த வேண்டியுள்ளது. இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம், நாட்டில் உள்ள தேசிய கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில்,"கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் படி தேர்தல் நடத்துவது சாத்தியமா, தேர்தல் பிரசார கூட்டத்தின் போது சமூக இடைவெளி பின்பற்றப்படுமா? என்பது குறி்த்து கட்சிகள் தங்களது கருத்தை வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என்பதால் தபால் ஓட்டுகளைப் பயன்படுத்தி வாக்களிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. அதன்படி சட்ட அமைச்சகம் நடத்தை விதிகளில் திருத்தம் மேற்கொண்டது. மாநில தேர்தல் ஆணையம் அவ்விதியை நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள், ஊனமுற்றோர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் ஓட்டுச் சட்டம் பொருந்தும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!