ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் வெற்றிக்கு சிக்கலா? சாட்டையை சூழற்றி உயர்நீதிமன்றம்...!

By vinoth kumarFirst Published Aug 13, 2021, 6:33 PM IST
Highlights

போடி தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போடி தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனைவிட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதில், அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவில் கடன் மதிப்பை குறைத்துக் காட்டி உள்ளதாகவும், எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, இந்த மனுவுக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம், அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

click me!