
உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால் திமுக தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு கொடுக்கப்படாமல் தேர்தலை அறிவித்துள்ளனர் இதனால் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி கிருபாகரன் தேர்தலை ரத்து செய்து , தேர்தல்க் தொடர்பான மூன்று அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் மேற்கண்ட முறைகளை கலைந்து டிச 30க்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டார். தனி நீதிபதி உத்தரவு எனபதாலும் ரூ.106 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என கூறப்படுகிறது.
அக்டோபர் 30 க்குள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படாவிட்டால் சட்ட சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த பிரச்சனைஅயை மையமாக வைத்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் . அவ்வாறு மேற்கண்ட அம்சங்கள் ஏற்று கொள்ளப்படும் பட்சத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை வாங்க வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கான மேல்முறையீட்டை தலைமை நீதிபதி அமர்வு முன்பு தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யும். இதையடுத்து நேற்று மாலை மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன் படி இன்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் அர்த்தம் தேர்தல் ஆணையம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்க வேண்டாம் என்பதாகும்.இந்த மனு ஏற்கப்படுமா எனபது இனிதான் தெரியவரும்.