எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரைச் சூட்ட வேண்டும் !! அழகிரி அதிரடி கோரிக்கை !!

Published : Mar 06, 2019, 09:53 PM IST
எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரைச் சூட்ட வேண்டும் !! அழகிரி அதிரடி கோரிக்கை !!

சுருக்கம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆம் பெயரை சூட்டடியது போல, எழுப்பூர் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரைச் சூட்ட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 
 
இது குறித்து அவர் எழுதியிருந்த கடிதத்தில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்பமிக்க இடமான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் நடந்த பிர்ச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இனி எம்.ஜி.ஆர் என்கிற பெயரில் அழைக்கப்படும் என அறிவித்துள்ளார். 

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி,  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்ததில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்டியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


மேலும்  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்றும்  அந்த கடிதத்தில் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
TN Govt Launches: மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!