எடப்பாடி- டி.டி.வி.தினகரனுக்கு ஒரே நேரத்தில் குறி... தட்டி தூக்கக் கிளம்பிய முன்னாள் பவர் சென்டர்!

By Thiraviaraj RMFirst Published Jan 31, 2019, 12:55 PM IST
Highlights

எடப்பாடி பழனிசாமி அணியும், டி.டி.வி.தினகரன் அணியும் மாறி மாறி ஆதரவாளர்களை இழுக்க காய் நகர்த்தி வரும் வேளையில், இவர்கள் இருவரது அணி ஆதரவாளர்களையும் வளைக்க அதிரடியாக திட்டம் தீட்டி வருகிறார் சசிகலாவின் சகோதரர்.  

எடப்பாடி பழனிசாமி அணியும், டி.டி.வி.தினகரன் அணியும் மாறி மாறி ஆதரவாளர்களை இழுக்க காய் நகர்த்தி வரும் வேளையில், இவர்கள் இருவரது அணி ஆதரவாளர்களையும் வளைக்க அதிரடியாக திட்டம் தீட்டி வருகிறார் சசிகலாவின் சகோதரர்.  

சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற நிலையில் டி.டி.வி.தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. தினகரன் அறிவித்த கட்சியின் பேரில் அண்ணாவும், திராவிடமும் இல்லை என திவாகரன் குற்றம்சாட்டினார். அதை தொடர்ந்து திவாகரன் அதிரடியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகம் என்ற புதிய கட்சியினை துவங்கினார். 

அடுத்து தனது அரசியல் பலத்தை காட்டுவதற்காக செப்டம்பர் 5ம் தேதி மன்னார்குடியில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய தினகரன், ’மன்னார்குடியில் செயல்பட்ட ஒரு பவர் சென்டர் தற்போது பீஸ் போய்விட்டது’ என திவாகரனை குறிவைத்து தாக்கினார். இதனால் திவாகரன் ஆதரவாளர்கள் கடும் கோபமடைந்தனர். அவர்களை சமாதானம் செய்த திவாகரன், கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களையும் நியமித்தார்.


  
இந்நிலையில் கடந்த மாதம் டெல்லிக்கு சென்ற திவாகரன் அங்கு ஒரு வார காலம் தங்கியிருந்து தனது கட்சியினை தேர்தல் கமிஷனில் பதிவு செய்யும் பணியினை மேற்கொண்டார். பின்னர் மன்னார்குடி திரும்பிய அவர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதில் வரும் பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஜெயலலிதாவின் 71ம் ஆண்டு பிறந்த தினம் வருவதை முன்னிட்டு அதே நாளில் மன்னார்குடியில் பிரமாண்டமான முறையில் பிறந்தநாள் கூட்டத்தை நடத்தலாம் எனத் திட்டமிட்டுள்ளார்.

கூட்டத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்களை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திவாகரனின் இந்த முடிவு அதிமுக மற்றும் அமமுகவில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தினகரனின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் உள்ள பதவி பறிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் பிப்.24ல் மன்னார்குடியில்  நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

click me!