"பிரதமரிடம் தமிழக வளர்ச்சி குறித்தே பேசினேன்... அரசியல் இல்லை" - முதலமைச்சர் எடப்பாடி விளக்கம்

Asianet News Tamil  
Published : May 24, 2017, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
"பிரதமரிடம் தமிழக வளர்ச்சி குறித்தே பேசினேன்... அரசியல் இல்லை" - முதலமைச்சர் எடப்பாடி விளக்கம்

சுருக்கம்

edappadi pressmeet after meeting with modi

பிரதமர் மோடியிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்றும் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்தே பேசினேன் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மனு அளித்துள்ளேன்.

தமிழகத்தில் நெட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

பம்பா, அச்சன்கோவில் ஆறுகளுக்கு செல்லும் உபரி நீரை தமிழகத்திற்கு வழங்க கோரிக்கை விடுத்துள்ளேன்.

தமிழகத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைவில் ஒப்புதல் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான காப்பீட்டு நிதியுதவி மத்திய அமைச்சம் மூலம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளேன்.

கேரளா அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

குடிமராத்து பணிக்கு 500 கோடி ரூபாய் நிதியை மானியமாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம்.

காவிரி மேலாண்மை வாரியம், மற்றும் காவிரி குழு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை வசம் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க வருமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியிடம் அரசியல் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ரஜினியை மிரட்டிய திமுக.. புது குண்டை தூக்கிப்போட்ட ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?
TVK Vijay: விஜய் செய்யப்போகும் மாயாஜாலம்.! வாக்கு அறுவடைக்கு தயாராகும் 'பெண்கள் படை'!