அதிமுகவை அடகு வைக்க நினைச்சாங்க ! ஆட்சியை கவிழ்க்கணும்னு நினைச்சாங்க ! அது மட்டும் நடக்கவே நடக்காது !! இபிஎஸ் வெறிப்பேச்சு !!

By Selvanayagam PFirst Published Jul 7, 2019, 8:30 AM IST
Highlights

அதிமுக ஆட்சியை திமுகவிடம் அடகு வைக்க வேண்டும் என பலர் நினைத்தனர்… அழிக்க வேண்டும் என நிலர் நினைத்தனர்… ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என சிலர் நின்னத்தனர். ஆனால் ஒரு அடிமட்டத் தொண்டன் கூட வேறு கட்சிக்கு போகாமல் கழகத்தை பாதுகாத்து வருவதால் அது நடக்கவே நடக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
 

அமமுக முக்கிய நிர்வாகியும்,  ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் வேலாயுதம் உள்ளிட்டவர்கள் தங்களது ஆதரவாளர்கள் 20 ஆயிரம் பேருடன் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர், நமது வீட்டில் உள்ளவர்கள் பிரிந்துசென்று, அவர்கள் மீண்டும் நம்மை சந்தித்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவோமோ? அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.

இந்த ஆட்சி, கட்சியை அழித்துவிடலாம் என்று சிலர் கனவு கண்டனர். அவர்களுக்கு இந்த இணைப்பு விழா ஒரு பெரிய பாடமாக இருக்கும். திமுகவிடம்  இந்த கழகத்தை அடகு வைத்துவிடலாம் என்று சிலர் நினைத்தார்கள், அது நடைபெறவில்லை. 

ஒரு தொண்டன் கூட இந்த கழகத்தில் இருந்து செல்லவில்லை. இந்த கழகத்தில் பிரிந்து சென்றவர்கள் எல்லாம் தாய் கழகத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் அ.ம.மு.க. கூடாரம் காலியாகிவிட்டது. இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார்.

இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு 18 எம்.எல்.ஏ.க்கள் எதிராக செயல்பட்டனர். அப்படி இருந்தும் இடைத்தேர்தலில் 9 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து, மக்கள் பணியாற்றி வருகிறோம். இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு சாவுமணி அடித்துள்ளோம் என எடப்பாடி குறிப்பிட்டார்.

click me!