#BREAKING எடப்பாடி பழனிசாமியின் ரைட் ஹேண்ட் அதிரடி கைது.. ஒரு மாதம் கழித்து தூக்கிய போலீஸ்..!

By vinoth kumarFirst Published Nov 28, 2021, 10:30 AM IST
Highlights

சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வந்தார். 

வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின்  தனி உதவியாளர் மணியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வந்தார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உதவியாளராக இருந்தபோது ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக பல்வேறு புகார்கள் இருந்து வந்தன.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி 17 லட்ச ரூபாய் தமிழ்ச்செல்வன் நண்பர் செல்வகுமார் மூலமாக பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் கடந்த மாதம் 26ம் தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் புகாரை பெற்று விசாரணை நடத்தியதில் வங்கி கணக்கில் 17 லட்ச ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உதவியாளர் மணி மற்றும் செல்வகுமார் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெறுதல் மற்றும் பணம் வாங்கிக்கொண்டு மோசடி ஈடுபடுதல் (120/B, 420 ) ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி தலைமறைவாக இருந்து வந்தார். அவர்  முன்ஜாமீன் தாக்கல் செய்த மனுவை  நீதிமன்றங்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் தனி உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த மணி அதிகாலை தீவட்டிப்பட்டி அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மணியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனையடுத்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!