சொந்த ஊரில் படு தோல்வி... டெல்லிவரை டேமேஜ் ஆன முதல்வர் எடப்பாடி இமேஜ்!

By sathish kFirst Published May 24, 2019, 11:41 AM IST
Highlights

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனீயைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே மெகா வெற்றியை பெற்றுள்ளது. முதல்வர், துணைமுதல்வர் என இருவரும் தங்களது இரண்டு தொகுதிகளிலும் அதிமுக கவனம் இருந்தது அதில், தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் டெல்லிவரை கவனம் பெற்றுள்ளார் ஆனால், எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரான சேலத்தில் திமுக வேட்பாளர் பார்த்திபன், முதல் சுற்றிலிருந்து முன்னிலை வகித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், சேலம் மக்களவை தொகுதி உள்ளது. வழக்கத்துக்கு மாறாக, இந்த தேர்தலில் அசரைடிக்கும் மெகா கூட்டணி, ஆளுங்கட்சி செல்வாக்கு, பணபலம் என ஏக செல்வாக்குடன் அதிமுக களம் இறங்கியதால் எப்படியும் அதிமுக மூன்றாவது முறையாக சேலம் மக்களவை தொகுதியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, ஆரம்பத்திலிருந்தே ஆளும் அதிமுக பின்னடைவைச் சந்தித்தது.  தபால் ஓட்டை அடுத்து மின்னணு வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, சேலம் மக்களவையில் அடங்கியுள்ள ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகித்தது. 

முதல் சுற்றிலிருந்தே கடைசி வரை, திமுக வேட்பாளர் பார்த்திபன், அதிமுக வேட்பாளர் சரவணனைக் காட்டிலும் ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 10000 முதல் 20000 வாக்குகள் வரை கூடிக்கொண்டே போனது. 26  சுற்றுகளுடன் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் . ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி களத்தில்  வெற்றி பெற்றுள்ளார்.  சொந்த ஊரு, ஒரு மாநிலத்தின் முதல்வர் என பலம் பொருந்திய கூட்டணி அமைத்து இப்படி படுதோல்வியை சந்தித்துள்ளது, டெல்லிவரை எதிரொலித்துள்ளது.

click me!