முதல்வர் எடப்பாடி பயணித்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு...!

Published : Mar 01, 2019, 10:12 AM IST
முதல்வர் எடப்பாடி பயணித்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு...!

சுருக்கம்

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு முதல்வர் பழனிசாமி சென்ற விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் பாதியிலேயே சென்னைக்கு திரும்பி வந்தது.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு முதல்வர் பழனிசாமி சென்ற விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் பாதியிலேயே சென்னைக்கு திரும்பி வந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் தமிழக அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து குமரி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி தூத்துக்குடி வடிரை விமானத்தில் சென்று அங்கிருந்து கன்னியாகுமரிக்கு காரில் செல்ல திட்டமிட்டிருந்தார். இதனையடுத்து சென்னையில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் மூலம் காலையிலேயே  முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். விமானம் சென்று கொண்டிருக்கும் போது பாதியிலேயே இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. 

தற்போது மீண்டும் தூத்துக்குடி செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை சென்று, பின்னர் அங்கிருந்து சாலை வழியாக கார் மூலம் செல்ல உள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!