தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்களுடன் கூட்டணி இல்லை... எடப்பாடி அதிரடி..!

By vinoth kumarFirst Published Jan 11, 2019, 1:55 PM IST
Highlights

கிராமத்தையே பார்க்காத ஸ்டாலின், தற்போது ஊர் ஊராக செல்வது வேடிக்கையாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். 

கிராமத்தையே பார்க்காத ஸ்டாலின், தற்போது ஊர் ஊராக செல்வது வேடிக்கையாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகியவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கிராமத்தையே பார்க்காத ஸ்டாலின் தற்போது ஊர் ஊராக சென்று கிராம சபை கூட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. 

நாங்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் கிராமத்தினரின் பிரச்சனை தெரியும், நகரத்தவரின் பிரச்னையும் தெரியும். தற்போது கிராமத்தினரின் பிரச்னையை தெரிந்து கொள்வதற்காகவே ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று கொண்டிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் போனதற்கு திமுக தான் காரணம். மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படுவதால் அதிமுக அரசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. அதிமுக அரசை பற்றி ஸ்டாலின் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார். 

மேலும் தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும். தமிழகத்திற்கு யார் நல்லது செய்வார்களோடு அவர்களுக்கே ஆதரவு என்பது அதிமுகவின் நிலைப்பாடு என முதல்வர் கூறியுள்ளார். தமிழகத்துக்கு நன்மை செய்பவர்கள் மத்தியில் ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு அளிக்கும். கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக பிரதமர் மோடி கூறியநிலையில் முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.

தமிழகத்து துரோகம் செய்தவர்களுக்கு ஒருபோதும் அதிமுக ஆதரவு அளிக்காது என திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழகத்து துரோகம் செய்தவர் என்று பழனி்ச்சாமி கூறியது பாஜகவை அல்லது காங்கிரஸ் கட்சியா என்று பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும் என அரசியல் வல்லூநர்கள் கூறியுள்ளனர். 

click me!