பன்னீரின் அரசியல் செல்வாக்கை நிலை குலைய வைத்த எடப்பாடி! இமேஜை காலி செய்த டீம் ஒர்க்...

By sathish kFirst Published Dec 26, 2018, 2:30 PM IST
Highlights

வெச்சு செய்யிறது, வெச்சு செய்யுறதுன்னு நெறய நாம கேள்விப்பட்டிருப்போம், நிஜமாகவே வெச்சு செய்வதென்றால் கடந்த ஒருவருடமாக ஓபிஎஸ்சின் இமேஜை மொத்தமாக டேமேஜ் செய்துவந்துள்ளது தான்.

சசியோடு சண்டை போட்டுக்கொண்டு , தனியாக சென்று தர்மயுத்தம் நடத்திய பன்னீருக்கு மக்கள் மத்தியில் ஆஹா ஒஹோ வரவேற்பு, சசி குடும்பத்தின் மேல் இருந்த கோபமே மக்களின் ஆதரவு பன்னீருக்கு கிடைத்ததென்றே சொல்லலாம். எடப்பாடி பதவி ஏற்றதிலிருந்து பன்னீரின் பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது.

ஆனால், எட்டப்படியுடன் கைகோர்த்த அடுத்த நிமிடத்திலிருந்து மக்கள் மத்தியில் எகிறிய செல்வாக்கு அதை விட வேகமாக சரியத்தொடங்கியது.  இதனையடுத்து, நடந்த சம்பவங்கள் அனைத்துமே கண்கூடாக பார்க்க முடிந்தது. அதாவது பன்னீரை கட்சிக்குள் சேர்க்க வைத்து அவரை படிப்படியாய் பலவீனப்படுத்துதல் என்ற மாஸ்டர் ப்ளானோடுதான் இதையெல்லாம் செய்யத் தொடங்கியது எடப்பாடி டீம்.

பன்னீரை சேர்த்துக் கொள்ள வேண்டும், அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று டெல்லியின் அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு டெல்லியின் செல்லப் பிள்ளையாக இருந்த பன்னீரின் செல்வாக்கை அடித்து காலி செய்ய திட்டம் போட்ட எடப்பாடி அண்ட் டீம் 
 
அவசர அவசரமாக அணிகள் இணைப்புக்கு முன்னர் அப்போதைய தமிழக அரசு பன்னீரின் செல்வாக்கு பற்றி தெரிந்துகொள்ள  உளவுத்துறை மூலம் ஓர் ஆய்வு நடத்தியது.  

அந்த ஆய்வில் தெரியவந்த ரிசல்ட் எடப்பாடியை அதிரவைத்தது...

“ ஓ.பன்னீரின் செல்வாக்கு தமிழக மக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் நல்ல நிலையில் உள்ளது. இந்தக் காலத்தில் பதவியைத் தூக்கி எறிந்த ஒரு மனுஷன் என்று பன்னீர் பற்றி பேசுகிறார்கள்.  இதையெல்லாம் தாண்டி ஒரு பொதுத் தலைவராக பன்னீர் பார்க்கப்படுகிறார்  என்பதுதான் அந்த ஆய்வின் ரிசல்ட்.

அந்த ஆய்விலேயே இன்னொரு உட்பிரிவும் இருக்கிறது.”ஒருவேளை பன்னீர் ஆட்சியோடு சேர்ந்துவிட்டால் அவரது இமேஜ் காலியாகும், பதவிக்காக மீண்டும் சரண்டராகிவிட்டார் பன்னீர் என ஆய்வில் செம்ம ரகளையான ரிசல்ட் வந்து விழுந்தது.

இந்த முடிவுக்குப் பின்னர்தான், ஓ.பன்னீரின் அரசியல் செல்வாக்கை நிலை குலைய வைத்து, இப்பொழுது அவரது தம்பியின் பித்தலாட்டத்தை வெளியில் தெரியவைத்தது என அனைத்தும் எடப்பாடியின் மாஸ்டர் பிளான்களில் ஒன்று.

click me!