இதை ஒதுக்காதது எங்களுக்கு ஏமாற்றம்தான்...! மத்திய அரசை விமர்சிக்கும் எடப்பாடி...!

Asianet News Tamil  
Published : Feb 01, 2018, 07:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
இதை ஒதுக்காதது எங்களுக்கு ஏமாற்றம்தான்...! மத்திய அரசை விமர்சிக்கும் எடப்பாடி...!

சுருக்கம்

edapadi palanichamy Criticizing the federal government

சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்துக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது எனவும் அதேவேளையில் பெங்களூரு புறநகர் ரயில் போக்குவரத்து மேம்பாட்டுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று 2018-19 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்து உரையாற்றினார். 

அதில் பல்வேறுதிட்டங்கள் குறித்த அறிவிப்பை அருண்ஜெட்லி வெளியிட்டார். இதற்கு எதிர்கட்சிகள் பெரும்பாலும் ஏமாற்றத்திற்கான பட்ஜெட் என விமர்சித்தனர். 

இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்துக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது எனவும் அதேவேளையில் பெங்களூரு புறநகர் ரயில் போக்குவரத்து மேம்பாட்டுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் கிராமப்புற மற்றும் சுகாதாரத்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவமாக அமைந்துள்ளது எனவும் , வேளாண்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கதக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

பட்ஜெட் வளர்ச்சிக்கானது எனவும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது எனவும் ஆபரேஷன் கிரீன் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது எனவும் தெரிவித்துள்ளார். 

பிரமாண்ட உணவுப்பூங்கா திட்டத்தால் தமிழகம் பயனடையும் எனவும் வேளாண்மை, ஊரக வளர்ச்சிக்காண திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஆளுநரை அவமதிக்க திட்டமிட்டே எழுதி கொண்டு வந்த ஸ்டாலின்..! இபிஎஸ் ஆத்திரம்..!
ஒரே பொய் பொய்யா எழுதி கொடுப்பீங்க, நான் வாசிக்கனுமா..? உரையை புறக்கணித்தது ஏன்..? ஆளுநர் விளக்கம்