கடுமையாக போட்டியிடுவதன் மூலமே ஜெயிக்கணும் ! குறுக்கு வழியில் இல்ல !! ராஜீவ் சந்திரசேகர் அதிரடி அட்வைஸ் !!

By Selvanayagam PFirst Published Dec 2, 2019, 3:32 PM IST
Highlights

இந்தியாவைச் சேர்ந்த பழைய வணிக நிறுவனங்கள் புதிய இளம் தொழில் ஆர்வலர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தெரிவித்துள்ள ராஜீவ் சந்திரசேகர் எம்.பி.  குறுக்குவழியில் அல்ல என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தொழிலதிபர் ராகுல் பஜாஜ், ‘மத்திய அரசை விமா்சிக்கும் விவகாரத்தில் நாட்டு மக்களிடையே அச்ச உணா்வு நிலவுகிறது. 

விமா்சனங்களை அரசு ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை மக்களிடையே இல்லை’ என்று கூறி அதிர வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட தங்களது கருத்துக்களை கூற முடியாமல் அச்சத்தில் உள்ளதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.

ஆனால் ராகுல் பஜாஜ் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து பேசிய அமித் ஷா, கார்ப்பரேட் நிறுவனங்கள் நியாயமாக செயல்பட்டால் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார்..

இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது அரசிடம் இருந்து குறுக்கு வழியில் சலுகைகளை பெற முடியாது என பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் அதிரடியாக தெரிவித்துள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது மோடி ஆட்சியில் வரி ஏய்ப்பு, குற்றங்கள் செய்ய நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவைச் சேர்ந்த பழைய வணிக நிறுவனங்கள் புதிய இளம் தொழில் ஆர்வலர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடுமையாக போட்டியின் மூலமே ஜெயிக்க வேண்டும் என்றும், அரசை நிர்பந்தப்படுத்தி  அவர்களுக்கு ஏற்றார் போல கொள்கைகளை உருவாக்குவது,  உரிமங்களைப் பெறுவது போன்ற குறுக்கு வழி மூலம் அல்ல என்றும் ராஜீவ் சந்திரசேகர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

click me!