
அதிமுகவின் இரண்டு அணிகள் இணைந்த பிறகு ஒவ்வொரு முக்கிய புள்ளிகளும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக டிடி வி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தன்னுடைய கருத்தை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இனி அடுத்து வரும் நாட்களில் டிடிவி தினகரனுக்கு, ஆதரவு எம் எல் ஏக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவார்கள் என்றும், பழனிசாமி தலைமயிலான இந்த ஆட்சி இருப்பதற்கு காரணமே சின்னம்மா தான் என்றும் கூறினார்.
மேலும் பழனிசாமியும், பன்னீர் செல்வமும் பழனிசாமியும் சின்னம்மாவிற்கு பச்சை துரோகம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார். செய்தியாளர்கள் தொடர்ந்து கேட்ட கேள்விக்கு, தமிழகத்திற்கு புதிய முதல்வர் வேண்டும் என்றும், அது நானாக கூட இருக்கலாம் என காமெடியாக சொல்வது போல, மனதில் தோன்றியதை உண்மையாகவே வெளிப்படுத்திவிட்டார் நாஞ்சில் சம்பத்.
இந்த சந்திப்பின் போது, கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி உடனிருந்தார்.