
நாடு முழுவதும் 15வது குடியரசு தலைவருக்கான தேர்தல் தற்போது நடந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானோர் வாக்களித்தனர்.
திமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், வாக்களித்துவிட்டு, வெளியே வந்தபோது, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள், திமுக தலைவர் கருணாநிதி, வாக்களிக்க எப்போது வருவார் என கேள்வி எழுப்பினர். அதற்கு, “நீங்கள் இங்கேதானே இருப்பீங்க... பொறுத்து இருந்து பாருங்க..” என கூறிவிட்டு சென்றார்.
நேற்று, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலாயத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இதேகேள்வி கேட்டதற்கு, இதே பதிலை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.