கொரோனா தொற்றால் டி.எஸ்.பி உயிரிழப்பு... அதிர்ச்சியில் காவல்துறை..!

Published : Jun 02, 2021, 05:21 PM IST
கொரோனா தொற்றால் டி.எஸ்.பி உயிரிழப்பு... அதிர்ச்சியில் காவல்துறை..!

சுருக்கம்

கொரோனா தொற்றால் புளியங்குடி டி.எஸ்.பி.சுவாமிநாதன் உயிரழந்த சம்பவம் காவல்துறையினர் வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் புளியங்குடி டி.எஸ்.பி.சுவாமிநாதன் உயிரழந்த சம்பவம் காவல்துறையினர் வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றுக்கு முன் களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகிறார்கள். 

இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடியில் சுவாமிநாதன் என்பவர் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 20 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது,. இதனைத்தொடர்ந்து நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சுவாமிநாதன் உயிரிழந்தார்.

PREV
click me!

Recommended Stories

TVK VIJAY: செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு ஸ்கெட்ச்! வேட்பாளர் தேர்வில் விஜய்யின் 'மாஸ்டர் பிளான்' ஆரம்பம்!
வன்னியர்களின் 10.5% இடஒதுக்கீடு..! எடப்பாடியை குறிவைக்கும் ஓபிஎஸ்..! திமுகவின் மாஸ்டர் பிளான்!