
தமிழகத்தில் அடிச்சு தூக்கும் பாஜக..! சைலண்ட்டா வேலை பார்க்கும் முக்கிய புள்ளி..!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரையில் பாஜகவின் நிலைப்பாடு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
இந்த நிலையில் இது குறித்து ஆலோசனை நடத்திய பாஜக பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி தமிழகத்தில் காலூன்ற முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக இளைஞர்கள் மத்தியில் பாஜக வின் செயல்பாடு என்ன என்பது குறித்தும் இதுவரை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் வருங்காலத்தில் பாஜகவின் மிக முக்கிய திட்டங்கள் குறித்தும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரப்புரையை ஏற்படுத்தி வருகின்றனர் யூத் ஆப் இந்தியா டீம்.
இதற்கு மிக முக்கிய காரணமாக பாஜக இளைஞரணி செயலாளர் டி எஸ் பாண்டியராஜ் உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு தற்போது முழுவீச்சில் களத்தில் இறங்கி பாஜக குறித்த பரப்புரை மற்றும் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து வருகிறார் இவர்.
இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்..!
தொழிநுட்ப வளர்ச்சி மற்றும் மாறி வரும் காலத்திற்கும் ஏற்ப இளைஞர் எப்படி தயாராக வேண்டும் என மாணவர்கள் மத்தியில் சிறப்பு உரை நிகழ்த்தப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்கள் மத்தியில் ஆளும் பாஜக கொண்டு வந்துள்ள அற்புதமான பல விஷயங்களை தொடர்ந்து எடுத்துரைத்து உள்ளனர்.
இதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறதாம் ..மேலும் மோடி ஆட்சி குறித்து தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.