கொஞ்சமாக குடிங்க... முட்டிமுட்டி குடித்தால் நாங்க என்ன பண்றது... அமைச்சர் அசால்ட் பதில்..!

By Thiraviaraj RMFirst Published Jul 4, 2019, 5:49 PM IST
Highlights

மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால், பிரச்சினை இல்லை. அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால், பிரச்சினை இல்லை. அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ், மதுபானங்களின் தரம் குறைவாக உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது என குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, ’’உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடினால், கள்ளச்சாராயம் புகுந்துவிடும் என்பதாலேயே படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 132ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 152 கடைகளாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால், பிரச்சினை இல்லை. அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும். அதற்காக, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது’’ என்று அவர் தெரிவித்தார்.
 

click me!