நாட்டை பிளவு படுத்திடாதீங்க... அமித் ஷாவுக்கு பா.ம.க. ராமதாஸ் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Sep 14, 2019, 3:52 PM IST
Highlights

பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும் பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும் பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியா முழுவதும்  இந்தியை ஒரே மொழியாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘’இந்தியாவின் ஒற்றை மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறானது. இந்தி மொழி நாளில் இந்தியை உயர்த்திப் பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது!

உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது. இந்தியாவுக்கு இந்தியை அடையாளமாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட பிற மொழி பேசும் மாநிலங்களின் அடையாளங்களை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்க செயல் தானே?

இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி என்பதாலேயே இந்தி அனைத்து மக்களையும் ஒருமைபடுத்தி விடாது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும். உலகின் பல நாடுகளில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன’’ எனத் தெரிவித்துள்ளார். 

click me!