மனைவியிடமும், வேலைக்காரியிடமும் பெரியார் என்ன செய்யச் சொன்னார் தெரியுமா? அதிர வைக்கும் ஹெச்.ராஜா..!

Published : Jan 11, 2020, 03:30 PM IST
மனைவியிடமும்,  வேலைக்காரியிடமும் பெரியார் என்ன செய்யச் சொன்னார் தெரியுமா? அதிர வைக்கும் ஹெச்.ராஜா..!

சுருக்கம்

5 ரூபாய் பதவியில் இருந்து ஆல் இந்தியா செக்கரெட்டரி வரை எல்லாம் லேபிள் தான். ஆனால், தான் கண்டெண்ட் கொடுப்பவன் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘’இந்துக்கள் உணர்வுகள் ஒடுக்கப்படுமானால், இந்து மத உணர்வுகள் பாதிக்கப்படுமானால் அதற்கு எதிராக இந்த ஹெச்.ராஜா வந்து நிற்பான். அரசியல், பதவிகள் எல்லாம் அப்புறம் தான். அதைப்பற்றி அக்கறைபடுபவனல்ல நான். 

5 ரூபாய் பதவியில் இருந்து ஆல் இந்தியா செக்கரெட்டரி வரை எல்லாம் லேபிள் தான். கண்டெண்ட் கொடுப்பவன் ஹெச்.ராஜா.  நமக்கு கட்சி கொடுக்கிற அடையாளம் தான் பதவி. தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழை கற்க கூடாது என்றும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளச் சொன்ன பெரியார். அவரது வழி வந்தவர்கள் இன்று தமிழுக்கு ஆதரவா? தமிழ் விரோதிகளே.  இறைவன் அடியை பற்றி பேசுபர்கள் அனைவரும் இந்துக்கள் தான். திருவள்ளுவரும் இந்து தான்.

 

திமுகவும், திகவும் தமிழ் எதிரிகள். பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார். வீட்டில் பொண்டாட்டியிடமும், வீட்டு வேலைக்காரியிடமும் ஆங்கிலத்தில் பேசு என்றார். ஆகையால் பெரியார் ஆங்கிலேயர்களின் கைக்கூலி’’ எனத் தெரிவித்தார்.


 

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..