பத்து சொம்ப வெச்சுக்கிட்டு கட்சிக்குள்ளே பஞ்சாயத்து பண்ண வேண்டாம்: வெற்றிவேல் யாரைப்பார்த்து சொன்னார்?

First Published Apr 30, 2018, 11:59 AM IST
Highlights
Do not panic in the party with ten oclock and say Successor who told me


உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.

அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி...

*    எனக்கும் கமலுக்கும் இடையில் எந்த பிரச்னையும் இல்லை! நான் வக்கீலாக இருப்பதால் கட்சி வேலையை கவனிக்க முடியவில்லை. கட்சியில்தான் இல்லையே தவிர கமலின் வக்கீலாக தொடர்ந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன்!
-    அட்வோகேட் ராஜசேகர்

*    சோழர்களுக்குப் பிறகு காவிரி ஆற்றை தூர் வாரியது திராவிட முன்னேற்ற கழகம் தான்.
-    துரைமுருகன்.

*    காவிரி பிரச்னைக்காக மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதித்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தயார்!
-    சரத்குமார்.

*    ஜெய் ஆன்ந்தை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. ஆனால் பத்து சொம்பை வைத்துக் கொண்டு கட்சிக்குள் பஞ்சாயத்து பண்ணுவதுதான் கூடாது என்கிறோம்.
-    வெற்றிவேல்.

*    நாங்கள் எடப்பாடியிடமும் போகமாட்டோம்! தி.மு.க. பக்கமும் போக மாட்டோம். பத்து பேரோ, நூறு பேரோ, லட்சம் பேரோ, நாங்கள் ‘அம்மா அ.தி.மு.க.’ அணியில் வழக்கம்போல் அப்டியே போய்க் கொண்டிருப்போம்.
-    திவாகரன்.

*    தமிழ்நாட்டில் நம்ம கட்சியில் பத்து மாவட்டங்களில்தான் கோஷ்டி பூசல் அதிகமா இருக்குது. அதில் உச்சகட்டமாக இருப்பது கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான்.
-    ஸ்டாலின்.

*    மோடிக்கு நாங்கள் கறுப்பு கொடி காட்டினோம், பதிலுக்கு அவர்கள் எனக்கு காட்டுகிறார்கள். காவி கொடி பிடித்தவர்களை, கறுப்புக் கொடி பிடிக்க வைத்தது எனக்கு பெருமையே
-    வைகோ

*    மாநில அரசு என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது.
-    சிம்பு

*    ஹெச். ராஜாவுக்கு நல்ல மனநிலை ஏற்பட வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக் கொள்கிறேன்.
-    டி.ராஜேந்தர்.

*    கோயில் திருவிழாவுக்கு வரும் யானைகளின் கண்களில் லேசர் லைட்டை அடித்து, மிரள வைத்து பெரும் கலவரத்தை உருவாக்கி மனித உயிர்களை பலிவாங்கும் முயற்சியில் சிலர் கேரளாவில் இறங்கியுள்ளனர்.
-    கேரள வளர்ப்பு யானை உரிமையாளர்கள்.

click me!