சில்லரையாக காய்கறி வாங்க கோயம்பேடு சந்தைக்கு வரவேண்டாம்.. எச்சரிக்கும் மொத்த வியாபாரிகள் சங்கம்..

By Ezhilarasan BabuFirst Published Apr 20, 2021, 1:03 PM IST
Highlights

"கோயம்பேடு சந்தைக்கு வரும் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு சிஎம்டிஏ மூலம் 'பாஸ்' வழங்க வேண்டும் எனவும், சில்லரையாக காய்கறி வாங்க கோயம்பேடு சந்தைக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் சிறு மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.  

"கோயம்பேடு சந்தைக்கு வரும் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு சிஎம்டிஏ மூலம் 'பாஸ்' வழங்க வேண்டும் எனவும், சில்லரையாக காய்கறி வாங்க கோயம்பேடு சந்தைக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் சிறு மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு சிஎம்டிஏ மூலம் பாஸ் வழங்க வேண்டும் என்று சிறு மொத்த  வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பேட்டியளித்த அண்ணா சிறு மொத்த வியாபாரிகள் சங்கத்தினர், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு சிஎம்டிஏ நிர்வாகத்திடம் பாஸ் கேட்டுள்ளோம், ஆனால் பாஸ் வழங்கப்பட மாட்டாது என்றும், காவல்துறையினரிடம்  சங்க அடையாள அட்டையை காண்பித்தால் சந்தைக்கு செல்ல அனுமதிப்பார்கள் எனவும் சிஎம்டிஏ தரப்பில் கூறியுள்ளனர்.கோயம்பேடு சந்தைக்கு  அதிகாலை 2 மணி முதலே காய்கறிகளை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் வரத்தொடங்குவர். 

ஊரடங்கை நீடித்தால் பாஸ் கட்டாயம் வேண்டும், பாஸ் வழங்கவில்லை என்றால் புறநகர் பகுதியில் இருந்து வருவோருக்கு சிக்கல் ஏற்படும் என்றனர். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் ஏற்றி வருவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற அவர்கள், 1 கிலோ, 2 கிலோ என சில்லரையாக காய்கறிகளை வாங்கும் பொதுமக்கள் கோயம்பேடு சந்தைக்கு வருவரை தவிர்க்க வேண்டும், மொத்த வியாபாரிகள் மட்டுமே சந்தைக்கு வர வேண்டும். என்ற அவர்கள், சில்லரை கணக்கில் காய்கறி வாங்க வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகிறோம். மேலும், இனி வரும் நாட்களிலும் காலை 7 மணி முதல் 12 மணிவரை வழக்கம்போல கோயம்பேடு சந்தை இயங்கும் என கூறினர். 
 

click me!