தேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு!!

By Asianet TamilFirst Published Aug 9, 2020, 9:04 PM IST
Highlights

தேர்தல் பணிகளை திமுக தொடங்கக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் இருக்கிறார்கள் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குக் காரணமாக சென்னை அயனாவரத்தில் கடந்த 5 மாதங்களாக தன் ஆட்டோவுக்கு எஃப்.சி. எடுக்க முடியாத விரக்தியில் ஆட்டோவை கொளுத்தினார் தாண்டவமுத்து என்பவர். இத்தகவலை அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவர் புதிய ஆட்டோ வாங்கிக்கொள்வதற்கு நிதி உதவி வழங்கினார். அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
“தமிழகத்தில் கமிஷன் மற்றும் கரப்ஷன் ஆட்சி நடைபெற்றுவருகிறது. நான் இ-பாஸ் எடுக்காமல் தூத்துக்குடி சென்றதாக கூறுகிறார்கள். நான் இ-பாஸ் எடுக்காமல் சென்ற என் மீது அரசு ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? இ-பாஸ்  நடைமுறையை நீக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தேர்தல் பணிகளை திமுக தொடங்கக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் இருக்கிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் என்னை சாக்லேட் பாய் என்று கூறியிருக்கிறார். அது தவறான வார்த்தை இல்லை. ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பிளேபாய்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்

click me!