இவர் தான் அடுத்த திமுக இளைஞரணி மாநில அமைப்பாளர் ! உதயநிதி ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப் போகிறார் !!

Published : Aug 13, 2019, 11:24 AM IST
இவர் தான் அடுத்த திமுக இளைஞரணி மாநில அமைப்பாளர் ! உதயநிதி ஸ்டாலின் என்ன  முடிவெடுக்கப் போகிறார் !!

சுருக்கம்

திமுக இளைஞரணியில் தனது மகன் கதிர் ஆனந்த்துக்கு மாநில அளவிலான பொறுப்பு கிடைக்கும் என்றும், வேலூர் மாவட்ட அரசியலில் என்னைப் போல இனி கதிர் ஆனந்த்தான் தெரிய வேண்டும் என்றும் திமுக பொறுப்பாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் திமுக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் ஏசி சண்முகத்தை 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆனால் துரை முருகன் தனது மகனை ஜெயிக்கவைப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். முதலில் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டில் சிக்கி தேர்தல் நிறுத்தப்பட்டபோது நொந்து போன துரை முருகன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி மீண்டு வந்தார். மற்ற தொகுதிகளுடன் சேர்ந்தது வேலூருக்கு தேர்தல் நடத்திருந்தால் லச்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் என மகன ஜெயித்திருப்பானே என அவர் புலம்பித் தள்ளிவிட்டார்.

பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேதி அறிக்கப்பட்டதில் இருந்து கதிர் ஆனந்த்தை ஜெயிக்க வைக்க மிகக் கடுமையாக உழைத்தார். அதுவும் ஏசி சண்முகத்துத்துக்கு எதிராக கடுமையாக போட்டி நிலவியது.

அரசு எந்திரங்களும்,  பணமும் தேர்தலில் புகுந்து விளையாடியது. இது துரை முருகனுக்கு சற்று பீதியை கிளப்பியிருந்தது. வாக்கு எண்ணிக்கை நாளன்று துரை முருகன் இன்னும் பயந்து போனார். முதல் நான்கு சுற்றுகளில் அதிமக வேட்பாளரே முன்னிலையில் இருந்ததால் மனிதர் நொந்து போனார். பின்னர் ஒரு  வழியாக கதிர் அனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றி மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கவில்லை என்றாலும் ஓரளவு திருப்தி அடைந்தார்.

இந்நிலையில் தனது மகனின் வளர்ச்சியை சற்று மேல் மட்டத்துக்கு கொண்டு போகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தனது மகனை எம்,பி. ஆக்கிய நிலையில் இனிமேல் கட்சி ரீதியா கதிர் ஆன்ந்த்தை மேல கொண்டாரணும்’ என்று தனக்கு நெருக்கமான வேலூர் புள்ளிகளிடம் பேசிய துரைமுருகன், “இளைஞரணியில கதிருக்கு மாநிலப் பொறுப்பு கிடைக்கும் போல தெரியுது. அதனால போஸ்டர்ல இனி என்னை விட கதிர் படத்தையே பெரிசா போடுங்க. இனிமே வேலூர் அரசியல்ல கதிர்தான் என்னைப் போல தெரியணும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

வரும் 25 ஆம் தேதி இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர்கள், மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்துக்கு முன்பே கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் மாநில அளவில் பொறுப்பு கிடைக்கும் என்று துரை முருகன் கூறிவருவதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!