திமுகவுக்கு ஆதரவு தர தயாராகும் அதிமுக எம்எல்ஏக்கள் !! லிஸ்ட் போட்டு விரட்டும் எடப்பாடி !!

By Selvanayagam PFirst Published Jun 5, 2019, 9:13 PM IST
Highlights

எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க அதிமுக எம்எல்ஏக்களை திமுக விலைக்கு வாங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், திமுகவுடன் பேசி வருவதாக கூறப்படும் அதிமுக எம்எல்ஏக்களின் லிஸ்ட்டை எடுத்து வைத்துக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விசாரணை நடத்தி வருகிறார்.

22 தமிழக சட்டப் பேரவைக்கு நடைபெற்ற இடைத் தேர்தலிகளில் வென்று ஆட்சி அமைத்துவிடலாம் என மு.க.ஸ்டாலின் பெரிய அளவுக்கு நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் மக்களவைத் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற திமுக இடைத் தேர்தல்களில் 13 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இது எடப்பாடியை அகற்றிவிட்டு திமுக ஆட்சி அமைக்க போதுமானதாக இல்லை.

அதே நேரத்தில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துவிட்டதால் எடப்பாடி பழனிசாமி அரசை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அசைக்க முடியாதோ என்ற சந்தேகம் எழுவதாக திமுகவினர் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில்தான் ஸ்டாலின் சம்மதித்தால்  அதிமுகவை உடைக்க முடியும் என்று கரூர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.  அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தன்னிடம் நல்ல நட்பில் இருக்கிறார்கள் என்று அனிதா ராதாகிருஷ்ணனும் சொல்லியிருக்கிறார். அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் அமைச்சர் பதவி, வாரியப் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கிறார்கள். மேலும் அமைச்சர்கள் சிலரும் எடப்பாடியோடு முரண்பட்டுள்ளனர். 

இந்த நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்களிடம் பேசினால்  திமுக பக்கம் வர அவர்கள் தயங்க மாட்டார்கள். செந்தில்பாலாஜிக்கு கட்சியில் பதவியும் தேர்தலில் சீட் கொடுத்து ஜெயிக்க வைத்திருப்பது அதிமுகவினருக்கு நம் மீது நல்ல நம்பிக்கை வந்திருக்கிறது. அதனால் தேவையான எம்எல்ஏக்களை நம்ம பக்கம் இழுப்பதன் மூலம் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டலாம். நாம் அமைதியாக இருந்தால் இந்த ஆட்சி இன்னும் இரண்டு வருடத்திற்கு நீடிக்கும் என்று சீனியர்கள் ஸ்டாலினிடம் சொல்லியுள்ளனர். 

இந்த பிளானுக்கு  ஸ்டாலின் ஒப்புதல் தந்ததையடுத்து இந்த திட்டம் செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து 15  எம்எல்ஏக்கள் வரை இழுக்க முயற்சி நடக்கிறது. தற்போது வரை 7 எம்எல்ஏக்கள் திமுக வலையில் விழுந்திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உளவுத்துறை அதிகாரிகளிடம் எந்தெந்த எம்எல்ஏக்கள் திமுக தொடர்பில் இருக்கிறார்கள் என்பது தொடர்பான அறிக்கையை பெற்றிருக்கிறார்.
.
அந்த  சந்தேகப்பட்டியலில் 30 எம்எல்ஏக்கள் வரை இருந்ததாகவும், அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேரிலும், போனிலும் விசாரணை நடத்தியுள்ளார். 

அப்போது அந்தப் பக்கம் யாரும் சாய்ந்துவிடக்கூடாது. உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் மீது உளவுத் துறையின் கண்கள் தொடர்ந்து ஃபாலோ செய்து வருகிறது.

click me!