திமுக எம்பிக்களை பயங்கர கேவலமா திட்டிய தமிழிசை... செம டீசன்ட்டா கழுவி ஊத்தும் திமுகவினர்!!

By sathish kFirst Published Jun 1, 2019, 1:15 PM IST
Highlights

தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள எம்பிக்கள் காதறுந்த ஊசிகள் என தமிழக பிஜேபி தலைவர் 
தமிழிசை திமுகவை கேவலமாக திட்டி ட்வீட் போட்டுள்ளார்.  இதற்கு திமுக தொழில்நுட்ப பிரிவு மற்றும் நெட்டிசன்கள் கோபத்தையும் நாகரீகமான வார்த்தைகளால் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள எம்பிக்கள் காதறுந்த ஊசிகள் என தமிழக பிஜேபி தலைவர் 
தமிழிசை திமுகவை கேவலமாக திட்டி ட்வீட் போட்டுள்ளார்.  இதற்கு திமுக தொழில்நுட்ப பிரிவு மற்றும் நெட்டிசன்கள் கோபத்தையும் நாகரீகமான வார்த்தைகளால் பதிலடி கொடுத்து வருகின்றனர்.  

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் அமோக வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.   தென்னிந்தியாவை பொறுத்தவரை, திமுக கூட்டணியே மாஸ் காட்டியது. அதிமுக பிஜேபி கூட்டணி படு தோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக தேனி தொகுதியில் வென்றது ஆனால், பிஜேபி, பாமக, தேமுதிக என மூன்று கட்சிகளும் மொத்தமாக வாஷ் அவுட் ஆனது. அதிலும் பிஜேபி வேட்பாளர்களான தமிழிசை, சிபி.ராதா கிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களே படு தோல்வி அடைந்தது பிஜேபியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எப்படியும் ஜெயிச்சு மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில் இருந்த தமிழக பிஜேபியின் கனவில் மண்ணை வாரி போட்டது தேர்தல் முடிவு. இதைத்தொடர்ந்து புதியதாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என   எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இடமளிக்கப்படவில்லை. ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இடம் கொடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 

பிஜேபி தமிழகத்திற்கு நல்லதே செய்யாது என்று சொல்லரிங்க. அது நாங்கள் எதிர்பார்த்ததுதான் ஆனால் தமிழக பிஜேபி கட்சி காரர்களுக்கும் உங்கள் கட்சி ஒன்னும் பன்ன மாட்டுதே. ஒரு வேலை அந்த ஆதங்கத்தை தான் வெளிபடுத்துறிங்களோ உங்களால எங்களுக்கும் எதுவும் கிடைக்க மாட்டுது என்று

— Muthuselvam (@Muthuse62544702)

இந்நிலையில், தமிழகத்தில் வெற்றிபெற்ற எம்பிக்கள் குறித்து நாளிதழ் ஒன்றில் பவர்ஃபுல் பார்லிமென்டேரியன்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியானது.  நிலையில், அதை போட்டோ ஷாட் எடுத்து  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை "காதறுந்த ஊசிகள்?தைக்கப்பயன்படுமா?குத்திப்பார்க்கலாம்?அவ்வளவுதான்?இதுதான் தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்பிக்களின் நிலைமை.?குரல் கொடுக்கலாம்?வெளிநடப்பு செய்யலாம்?கோரிக்கை மனு கொடுத்து படம் காட்டலாம்?அவ்வளவே ஆணையிடும் அதிகாரம் யாரிடம்? இருந்தாலும் தமிழகத்தின் தேவைகளை பாஜக நிறைவேற்றும்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவரான டாக்டர் தமிழிசை, இப்படியா கேவலமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை விமர்சித்து ட்வீட் போடுவது? இதுதான் நாகரீகமா? என தமிழிசை டிவீட்க்கு திமுகவினர் ரிப்லை செய்து வருகின்றனர்.

இதோ... 

ஜனநாயகத்தின் அர்தம் தெரியாதவரின் பிதற்றல் டீவிட். வாஜ்பாய், அத்வானி, திருமதி சுஷ்மா சுவராஜ் எல்லாம் காதறுந்த ஊசிகளா? பாஜக ஆட்சி அமையும் முன்பு?

— Suki Magan Arumugam (@ArumugamSuki)

இது தமிழக மக்களின் உணர்வுகளை கேவலப்படுத்தும் செயல்.. மக்களின் ஆதரவை பெறும் முயற்சியில் இது பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

— Vasanthraj (@msvjain)

அருமை.. இப்படி பட்ட தடாலடியான கருத்துகள் மட்டும் தான் பா.ஐ.க வின் மேலான வெறுப்பை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.. 😉😉 தொடரட்டும் உங்கள் கட்சி பணி.. 😂😂😂👎🏻👎🏻

— Sudhakar VJA (@SudhakarVja)

நீங்களே ஒரு காதறுந்த ஊசி தான் ஏனென்றால் தேர்தலில் நிற்காமல் நிர்மலா சீதாராமன் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் மந்திரி ஆகும் பொழுது தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கதறும் உங்களுக்கு ஒரு இணை அமைச்சர் பதவியை தந்திருக்கலாம் தானே ஆகவே நீங்கள் ஒரு காதறுந்த ஊசி

— ஆதனெழினி சசி (@EmAYqy3R8433u0p)

காதறுந்த ஊசிகள் குத்தினால் இரத்தம் வரும் அல்லவா?
எங்களுக்கு தைக்க பயன் படவில்லை என்றாலும் பரவாயில்லை...
நாங்கள் உங்களை போன்ற ஆட்களை குத்துவதற்கு பயன் படுதிகொள்வோம்

— *மோடு முட்டி*'MODU MUTTI' (@mod_mutti)

காதறுந்த ஊசி குத்தப்பயன்படுத்தலாம் ஆனால் ஒன்றுக்கும் ஆகாத உடைந்த ஊசி பேசுவதுதான் வேடிக்கை

கள்ளி மரத்துல கள்ளிபால்தான் வரும்! இவங்க்கிட்டே போய் நல்ல வார்த்தையே எதிர்பார்க்கமுடியுமா தமிழ்மக்களின் உணர்வுகளை மதிக்கமுடியாதவர்கள் காவளர்களாம் என்ன வேடிக்கை பாருங்க.

— Palanivel (@Palaniv39140507)

நீங்க தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்ய வேண்டாம்

எங்கள் வரிப்பணமும் உங்களுக்கு தேவையில்லை

கோவத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறது உங்களது வார்த்தைகள் மீண்டும் எச்சரிக்குறோம்

எங்கள் கைகள் ஓங்கும்போது உங்கள் கைகள் உடைக்கபட்டிருக்கும் அப்போது இதுபோன்ற டிவிட் போட முடியாது

— இராதாகிருஷ்ணன் இரா (@6Krakki)
click me!