சுயநலத்துக்காக மனசாட்சியையே மாற்றுவது மகா, மெகா , புரட்சி..... அய்யா ராமதாசைக் கதறவிட்ட திமுக எம்.பி. !!

By Selvanayagam PFirst Published Nov 22, 2019, 10:56 AM IST
Highlights

அதிமுக சட்டத்தை அதிமுகவே மாற்றுகிறது.. மற்றவர்கள் சட்டத்தை மாற்றுவது புரட்சின்னா? சொந்த சட்டத்தை மாற்றுவது மாபெரும் புரட்சி என பாமக ராமதாசின் டுவிட்டுக்கு திமுக எம்.பி. செந்தில்குமார் கிண்டல் பதில் அளித்துள்ளார்.
 

1996 ஆம் ஆண்டு மேயர் தேர்தல் முதல்முறையாக நேரடி தேர்தலாக நடத்தப்பட்டது. அதன்பிறகு 2006 ஆண்டு வரை மறைமுக தேர்தலாக மாற்றப்பட்டது. அதன்பின் கடைசியாக நடந்த 2011 உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு மேயர் தேர்தலை நேரடி தேர்தலாக அறிவித்தது. 

ஏற்கனவே இருந்த சட்டத்தை மாற்றி மீண்டும் மேயர் தேர்தலை நேரடியாக நடத்த ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 15 மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலை நடத்த அமைச்சரவை முடிவெடுத்து அவரச சட்டம் கொண்டு வரப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  

 
 
இந்த மாற்றத்துக்கு திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்  ஏற்கனவே அதிமுகவால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை மீண்டும் அதிமுகவே மாற்றியதற்கு பாமக ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அதிமுக சட்டத்தை அதிமுகவே மாற்றுகிறது.. மற்றவர்கள் சட்டத்தை மாற்றுவது புரட்சின்னா? சொந்த சட்டத்தை மாற்றுவது மாபெரும் புரட்சி  என உள்ளாட்சித் தேர்தல் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

ராமதாசின் இந்த பதிவுக்கு தர்மபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் பதில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சுயநலத்துக்காக மனசாட்சியையே மாற்றுவது மகா, மெகா , புரட்சி…அய்யா வாழ்த்துகள் என கிண்டலாக பதிவு செய்துள்ளார்.

click me!