காங்கிரஸ் ஆட்சியில் வேண்டாத திட்டங்களுக்கு முட்டு கொடுத்த திமுக: அறிவுரை கூறிய ஸ்டாலினை கிழித்த குத்தீட்டி.

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2020, 12:33 PM IST
Highlights

அதாவது ஜிஎஸ்டி வருவாய் இழப்பை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான மத்திய அரசு அறிவுறுத்தல் குறித்து நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான முக. ஸ்டாலின் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக வலுக்கட்டாயமாக திணித்த  திட்டங்களுக்கெல்லாம் முட்டு கொடுத்த திமுக, இப்போது ஜிஎஸ்டி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அறிவுரை கூறுகிறது. ஆனால் அதையும் உரியதா என்பதை உரசிப்பார்த்து, தமிழகத்தின் நலனுக்கு ஏற்றதாக இல்லையா என்பதை பரிசீலித்தே தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக முடிவெடுக்கும் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது ஜிஎஸ்டி வருவாய் இழப்பை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான மத்திய அரசு அறிவுறுத்தல் குறித்து நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான முக. ஸ்டாலின் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் குத்தீட்டி பகுதியில் ஸ்டாலினின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் எத்தனையோ ஜீவாதார உரிமைகளையும் கடுகளவும் குறைவில்லாமல் வென்றெடுப்பதில், இந்தியாவின் இன்ன பிற  மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது தாய்வழியிலான தமிழகத்தின் ஆட்சி. இதற்கு காவிரி விவகாரத்தில் மேலாண்மை ஆணையத்தை போராடிப் பெற்றது, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது. மீத்தேன், ஸ்டெர்லைட் உள்ளிட்ட தமிழக மக்கள் விரும்பாத விபரீத திட்டங்களுக்கு விடை கொடுத்தது. என்றெல்லாம் அனேக ஆதாரங்களை நம்மால் அடுக்கி காட்ட முடியும்.

 அதுபோலவே இரு மொழிக் கொள்கையில் உறுதி, சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழி திணிப்புகளை ஏற்க மாட்டோம் என்பதில்  தீர்க்கம் என தமிழக அரசு தேசத்தின் கூட்டாட்சிக்கு உரிய வகையில் ஒத்துழைப்பு கொடுக்கும் அதேவேளையில், மாநிலத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் போராடி வெற்றி காண்பதிலும் அளப்பரிய சாதனைகளை படைத்து வருகிறது. 

அம்மாவின் வழியிலான எளிமை சாமானியர் எடப்பாடி அரசு, இந்நிலையில் மாநிலங்களுக்கு உரிய ஜிஎஸ்டி வரி வருவாய் நிலுவை மற்றும் இழப்புகள் குறித்து தமிழகத்தின் ஆணித்தரமான கருத்தை  அதிமுக அரசு, நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் தெளிவோடு எடுத்துரைக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனாலும் கச்சத்தீவை பறிகொடுத்த திமுக, 2 லட்சம் ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்த திமுக, உணவு பாதுகாப்பு மசோதா நீட் உள்ளிட்ட அன்றைய காங்கிரஸ் ஆட்சியை மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும்  விதமாக வலுக்கட்டாயமாக திணித்த திட்டங்களுக்கு எல்லாம் இசைந்து  முட்டுக் கொடுத்த திமுக, ஜிஎஸ்டி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அறிவுரை கூறுகிறது. ஆனாலும் அது உரியதா என்பதை உரசிப்பார்த்து, தமிழகத்தின் நலனுக்கு ஏற்றதாக இல்லையா என்பதை பரிசீலித்து, அறிவார்ந்த தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கும்  என்பது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!