துரைமுருகன் இடத்தை பிடித்த டி.ஆர்.பாலு... திமுகவில் அடுத்தடுத்த அதிரடி!

Published : Sep 14, 2018, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 09:25 AM IST
துரைமுருகன் இடத்தை பிடித்த டி.ஆர்.பாலு... திமுகவில் அடுத்தடுத்த அதிரடி!

சுருக்கம்

திமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார். இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார். இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக சட்டதிட்ட விதி 17 பிரிவு, 3-ன்படி திமுக கழக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு அவர்கள் தலைமைக்கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த திமுக பொதுக்குழு நடைபெற்றபோதே இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற நிலையில், தற்போது திமுக முதன்மை செயலாளர் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் முதன்மை செயலாளர் பதவி என்பது மிக முக்கிய பதவியாக பார்க்கப்படுகிறது.

திமுகவின் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் நியமிக்கப்பட்டதால், அவர் வகித்து வந்த முதன்மை செயலாளர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில், டி.ஆர்.பாலு, திமுகவின் முதன்மை செயலாளராக நியமனம் செய்து, மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
எல்லாரும் அதிமுககாரன் கிடையாது... கட்சியில் இருப்பேன்டானு சொல்றவன்தான் ரோஷமானவன்..! செங்கோட்டையன் மீது செல்லூர் ராஜூ ஆவேசம்..!