ஸ்டாலினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முக்கிய நிர்வாகிகளுக்கு அடுத்தடுத்து கொரோனா.. அதிர்ச்சியில் அறிவாலயம்!

Published : Dec 25, 2020, 03:54 PM ISTUpdated : Jan 06, 2021, 01:21 PM IST
ஸ்டாலினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முக்கிய நிர்வாகிகளுக்கு அடுத்தடுத்து கொரோனா.. அதிர்ச்சியில் அறிவாலயம்!

சுருக்கம்

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் ருத்தரதாண்டவம் ஆடியது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு  பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சில அமைச்சர்கள், நாடாளுமன்ற  உறுப்பினர்கள் மற்றும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களை ஒப்பிடும் போது தற்போது கொரோனா பரவல் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், உருவாறிய புதிய கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் மிகுந்த  எச்சரிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும். மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இன்று திமுக முதன்மைச்செயலாளர் கே.என். நேருவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவரது உடல்நிலை சீராக உளடளதாகவும் கூறப்படுகிறது. நேற்று சென்னை துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

தொடர்ந்து மு.க.ஸ்டாலினுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் திமுக முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆகையால், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, மகன், மகள், மருமகன் என அனைவருமே அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!