சிஏஏ-க்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்... எடப்பாடி பழனிச்சாமிக்கு செக் வைத்த மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Dec 31, 2019, 11:53 PM IST
Highlights

“கேரள சட்டப் பேரவையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பணியை ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் பெருவிருப்பமாக இருக்கிறது."
 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் அறிவித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக கேரள அரசு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்த்தைக் கூட்டி, ‘குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது.


கேரள அரசின் இந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ள திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின், இது தொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவில், “கேரள சட்டப் பேரவையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பணியை ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் பெருவிருப்பமாக இருக்கிறது.


ஆகவே வருகின்ற ஜனவரி 6-ம் தேதி கூடும் தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில், இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

click me!