15 ஆயிரம் கிமீ பயணம்.. 1500 பொதுக்கூட்டங்கள்.. திமுக பிரமாண்ட திட்டம்.. மு.க.ஸ்டாலின் ஜன.5 முதல் பிரசாரம்..!

Published : Nov 20, 2020, 09:56 PM IST
15 ஆயிரம் கிமீ பயணம்.. 1500 பொதுக்கூட்டங்கள்.. திமுக பிரமாண்ட திட்டம்.. மு.க.ஸ்டாலின் ஜன.5 முதல் பிரசாரம்..!

சுருக்கம்

ஜனவரி 5-ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் என திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.   

சென்னையில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறுகையில், “தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். தமிழகம் முழுவதும் 1,500 பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெறும். இன்று முதல் அடுத்த 75 நாட்களுக்கு 15 ஆயிரம் கி.மீ தூரத்துக்கு பயணம் செய்து பிரச்சாரம் நடைபெறும். இந்த பிரச்சாரத்தில் 15 தலைவர்கள் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார்கள்.


500க்கும் மேற்பட்ட உள்ளூர் நிகழ்வுகள் லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி கலந்துரையாடல்களும் நடத்தப்படும். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் கட்டமாக டெல்டா மாவட்டங்களில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். ஜனவரி 5-ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்” என கே.என். நேரு தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!