
திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்த நாளை தொண்டர்கள் மற்றும் திமுக கட்சியின் பிரமுகர்கள் அனைவரும், மிகவும் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் திமுக தலைவர் கருணாநிதிக்கு, வாழ்த்து கூறி, அவரிடம் இருந்து ஆசி பெறுவதற்காக திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் குவிந்தனர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கருணாநிதியை நேரில் சென்று வாழ்த்து கூறி, ஆசி பெற்றார். இதன் பிறகு கருணாநிதி தனது வீட்டில் இருந்து வெளியே வந்து தொண்டர்களை சந்தித்தார். வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்து புன்னகைத்தார். இதனால் உற்சாகமடைந்த திமுக தொண்டர்களும் கையசைத்து ஆரவாரம் செய்தனர்.
கருணாநிதியின் 95வது பிறந்தநாளை ஜூன் மாதம் முழுவதும் கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது.
கருணாநிதிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்கள் ட்விட்டரில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி தொண்டர் ஒருவர், திமுக தலைவர் கருணாநிதி நலனுக்காகவும், கட்சியின் நலனுக்காகவும் அலகு குத்தி பழனிக்கு பாத யாத்திரை சென்றுள்ளார். இவருடைய புகைப்படத்தை மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.