திட்டமிட்டே ஸ்டாலின் பெயரை மறைக்கும் எம்.எல்.ஏ, எம்பிக்கள்... கட்டுப்பாட்டில் இருக்கிறதா கட்சி!

By sathish kFirst Published Jun 4, 2019, 12:47 PM IST
Highlights

சீட்டு கொடுத்து அழகு பார்த்த ஸ்டாலின் போட்டோ கூட போடாமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்திருப்பது ஸ்டாலின் விசுவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே அதிமுகவில் ஜெயலலிதா இருந்த சமயத்தில் 
ஜெயலலிதா  போட்டோ போடாமல்  இப்படி ஒரு காரியத்தை செய்திருந்தால் குறைந்தது 100 பேரின் பதவி பறிபோயிருக்கும்.

திமுக எம்.எல்.ஏ, எம்பி மற்றும் முக்கிய நிர்வாகிகள், அந்த கட்சியின் தலைவரை செய்ததைபோல, ஜெயலலிதாவையோ அல்லது கலைஞரையோ அலட்சியம் செயதிருந்தால், குறைந்தது 100 பேரின் பதவியாவது பறிபோயிருக்கும். 

அந்த அளவிற்கு, திமுக தலைவரின் ஸ்டாலின் புகைப்படத்தையோ அல்லது பெயரையோ பயன்படுத்தாமல், தங்கள் கட்சிக்கு ஒரு தலைவர் இருக்கிறார் என்பதையும் மறந்து, தான் தோன்றித்தனமாக, தன்னிச்சையாக, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. 

ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றத்திலிருந்தே அவர் முன்னால் பேசும் போது மரியாதையுடனும், விசுவாசமாக இருப்பதாக நடித்து வருகிறார்கள். ஆனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைவர்கள், தங்கள் சொந்த மாவட்டத்தில் நிகழும் உள்கட்சி பிரச்சனையை மையமாக வைத்து, சம்மந்தம் இல்லாமல் திமுக தலைமையை ஒரு சிலர், சாடி  வருவதாக தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் தான், இந்த கருத்துக்களை வலுப்படுத்தும் வகையில் ஒட்டு மொத்த கட்சிக்கும் அகில உலக தலைமையான முக ஸ்டாலினை கன்டுகொள்ளாமல் வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர்கள் மற்றும் செய்தித்தாள் விளம்பரங்கள், ஸ்டாலின் விசுவாசிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

ஸ்டாலினால் மட்டுமே பதவி பெற்று தற்போது எம்.எல்.ஏ வாக உள்ள திருப்பத்தூர் நல்ல தம்பி, அவரை ஒட்டுமொத்தமாக புகைக்கணித்தது, அப்பகுதி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்கிறது.

என்னதான் நியாபக மறதியில் மறந்து விட்டிருந்தாலும், மாவட்ட விஐபி துரைமுருகன், பக்கத்து மாவட்ட செயலாளர் காந்தி, லேட்டஸ்ட்டாக மாவட்ட செயலாளரான அங்கயற்கணி, எல்லாவற்றிற்கும் மேலாக நல்லதம்பியின் தந்தை அண்ணாதுரை, படங்கள் மட்டும் போடத்தெரிகிறதா என கேள்வியெழுப்புகின்றனர் லோக்கல் திமுகவினர். குறைந்தபட்சம் ஸ்டாம் சைஸ்ஸில் போட்டுள்ள அண்ணா, பெரியார் போட்டோ அளவுக்காவது போட்டிருக்கலாமே என்பது திமுகவினர் கருத்து.

இவர் தான் இப்படி என்றால், மூத்த தலைவரான அரக்கோணம் எம்பி ஜகத்ரட்சகன் வாரப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார். அந்த விளம்பரத்தில் கூட ஸ்டாலின் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது திமுக தொண்டர்களை வேதனடையச் செய்கிறது. இது மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளில், உள்ளூர் இரண்டாம் நிலைத் தலைவர்களின் அதிருப்தியாளர்கள் செயல்பாடுகள் இதே போலதான் உள்ளதாம்.

click me!