பா.ஜ.க தலைவருடன் திமுக எம்.பி.,க்கள் ரகசிய சந்திப்பு... திகிலில் உடன்பிறப்புகள்..!

Published : Jun 08, 2020, 10:22 AM IST
பா.ஜ.க தலைவருடன் திமுக எம்.பி.,க்கள் ரகசிய சந்திப்பு... திகிலில் உடன்பிறப்புகள்..!

சுருக்கம்

 திமுகவில் தற்போதைய எம்.பிக்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பு வகித்த ‘ரட்சகரும், மில்க்’ எம்.பியும் பாஜக முக்கியத்தலைவரை இருமுறை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. 

பாஜக தலைவரை திமுக எம்.பிக்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களும் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது திமுக வட்டாரத்தை திகிலில் ஆழ்த்தியுள்ளது. 

திமுக முக்கிய நிர்வாகிகளை இழுக்க பாஜக பல வகைகளில் முயன்று வருகிறது. இந்த நிலையில்தான் திமுகவில் தற்போதைய எம்.பிக்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பு வகித்த ‘ரட்சகரும், மில்க்’ எம்.பியும் பாஜக முக்கியத்தலைவரை இருமுறை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. பாஜக தலைவரை மட்டுமல்ல அக்கட்சியின் முக்கியதுறையில் அமைச்சர் பதவி வகிக்கும் ஒருவரையும் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. 

சமீபத்தில், திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, ‘ திமுகவில் இருந்து பலரும் பாஜகவில் இணைய உள்ளதாக கூறினார். ஆனால், இந்தச் சந்திப்பு தொகுதி ரீதியிலானது என திமுகவினர் கூறினாலும் ஏன் ரகசியமாக சந்திக்க வேண்டும் என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

PREV
click me!

Recommended Stories

Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
TN Govt Launches: மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!