சாத்தான்குளத்தில் தந்தை-மகன் சாவு.. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டதா.? டிஜிபியிடம் கனிமொழி அதிரடி!

By Asianet TamilFirst Published Jun 23, 2020, 9:13 PM IST
Highlights

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த  உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது. ஊரடங்கு நேரத்தில் கடை நடத்தினார் என்பதற்காக உயிரையே பறிக்கும் வன்முறை தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
 

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் இறந்த விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் செத்துவிட்டதா என்ற அடிப்படைக் கேள்வியை இந்த மரணங்கள் எழுப்புகின்றன என்று திமுக எம்.பி. கனிமொழி தமிழக டி.ஜி.பி.யிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.


சாத்தான்குளத்தில் மளிகை கடை நடத்திவந்த தந்தை மகனான ஜெயராஜ், பென்னீஸ் ஆகியோரை காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிரச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்குக் காரணமான காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கைக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக காவல்துறை தலைவரிடம் (சட்டம் ஒழுங்கு), திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. மனு அளித்துள்ளார்.

 
அதில், “சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே மொபைல் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னீஸ் ஆகியோரை சாத்தான்குளம் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து கண்மூடித் தனமான அடித்து உதைத்து, அதில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காவல் நிலையத்தில் போலீஸாரின் தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் இருவருக்கும் மருத்துவ உதவிகள் கொடுக்காமல்- அவர்கள் தாக்கப்பட்டதையும் மாஜிஸ்திரேட்டிடம் மறைத்து நீதிமன்ற காவல் பெற்று கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளது மனித நேயமற்றது. மிக மோசமான மனித உரிமை மீறல். சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் செத்துவிட்டதா என்ற அடிப்படைக் கேள்வியை இந்த மரணங்கள் எழுப்புகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த  உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது. ஊரடங்கு நேரத்தில் கடை நடத்தினார் என்பதற்காக உயிரையே பறிக்கும் வன்முறை தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.


இவ்வளவு கொடூரமான கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட அந்த காவல்துறை அதிகாரிகளை ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டால் மட்டும் நீதி வழங்கியதாக அர்த்தம் ஆகாது. பறிபோன உயிர்களை யார் திருப்பிக் கொடுப்பது? ஆகவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடக்காமல் பார்க்கவேண்டிய முழுப்பொறுப்பு காவல்துறை தலைவர் என்ற முறையில் தங்களுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். ஜெயராஜ் மற்றும் மகன் பென்னீஸ் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான உதவி ஆய்வாளர்கள், போலீஸார், சம்பந்தப்பட்டோர் அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருவரையும் உடனடியாக பணியிடை நிக்கம் செய்யவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

click me!