திமுக எம்.பி. கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு... அதிரடி காட்டிய காவல்துறை..!

By vinoth kumarFirst Published Oct 6, 2020, 10:54 AM IST
Highlights

சென்னையில் தடையை மீறி பேரணி நடத்தியதாக திமுக எம்.பி.கனிமொழி, கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்பட 191 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் தடையை மீறி பேரணி நடத்தியதாக திமுக எம்.பி.கனிமொழி, கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்பட 191 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேச சம்பவத்துக்கு நீதி கேட்டு திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் கையில் ஒளியேந்தி மகளிர் அணி சார்பில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று மாலை பேரணி நடைபெற்றது. அதற்காக சென்னை சின்னமலை, ராஜீவ்காந்தி சிலை அருகே திமுக மகளிர் அணியினர் திரண்டனர். நாம் ஏற்றும் ஒளி, தவறுகளை எரிக்கட்டும் என்ற முழக்கத்துடன் பேரணி தொடங்கியது. 

இந்த பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீபச்சுடர் ஏற்றி தொடங்கிவைத்தார். பேரணி, கனிமொழி எம்.பி. தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற சிறிது தூரத்திலேயே போலீசாரால் தடுக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னையில் தடையை மீறி பேரணி நடத்தியதாக திமுக எம்.பி. கனிமொழி, கீதாஜீவன் எம்.எல்.ஏ. உட்பட 191 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், தொற்று நோயைப் பரப்பக்கூடிய செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

click me!