ஆளுநரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபாலையும் சந்திக்க திமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவு…

Asianet News Tamil  
Published : Sep 10, 2017, 09:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:09 AM IST
ஆளுநரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபாலையும்  சந்திக்க திமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவு…

சுருக்கம்

dmk mla will mmeet speaker if tamilnadu tpmmorrow

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவைத்  தொடர்ந்து நாளை சபாநாயகர் தனபாலை சந்திக்க திமுக எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.  மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இன்று மாலை 5 மணியளவில் ஆளுநரைச் சந்திக்க உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால், சட்டப்பேரவையை உடனே கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர்.

ஆளுநர் சந்திப்பை தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் தனபாலையும் திமுக சந்திக்க முடிவு செய்துள்ளது.

பெரும்பான்மையை அதிமுக அரசு இழந்துவிட்டது என்றும், சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

Voter ID Card: வோட்டர் ஐடி தொலைஞ்சு போச்சா? கவலைப்படாதீங்க! 2 நிமிஷத்துல டவுன்லோட் பண்ணலாம்.!
மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?! திருவிழா கோலத்தில் நீலாங்கரை.!!!