நாவடக்கம் இல்லாத திமுக... அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஜெ.அன்பழகன்... வச்சு செய்யும் அதிமுக, பாஜக..!

By vinoth kumarFirst Published May 27, 2020, 11:11 AM IST
Highlights

சமூக நீதி காத்த கட்சி என்ற தம்பட்டம் அடித்துக் கொண்ட திமுகவில் ஆர்.எஸ்.பாரதி,  தயாநிதி மாறன், பி.டி.ஆர். தியாகராஜன் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது ஜெ.அன்பழகன் சிக்கியுள்ளார். 

சமூக நீதி காத்த கட்சி என்ற தம்பட்டம் அடித்துக் கொண்ட திமுகவில் ஆர்.எஸ்.பாரதி,  தயாநிதி மாறன், பி.டி.ஆர். தியாகராஜன் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது ஜெ.அன்பழகன் சிக்கியுள்ளார். 

தலித்துகளுக்கு பதவி குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார். தலைமைச் செயலாளர் சண்முகத்தை குறை கூறுவதாக நினைத்து நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்கள் என்று பேசி விட்டு அவசர அவசரமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.

இவர்கள் வரிசையில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் அம்பட்டயன் என்றமோசமான வார்த்தைகள் குறிப்பிட்ட திமுக எம்.எல்.ஏ., பி.டி.ஆர். தியாகராஜன் மன்னிப்பு கேட்டிருக்கிறார். முன் ஜாமீனுக்கு அப்ளை செய்யலாம் என்று யோசித்துக் கொண்டும் இருக்கிறார்.

இவர்கள்கள் முன் ஜாமீன் பதட்டங்களுக்கு நடுவே கடந்த வாரம் திமுகவில் இருந்து வெளியேறிய பின் ஐக்கியமான முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி ஜாதி வேறுபாட்டுக்கு உரம் போட்டு திமுக வள்ர்க்கிறது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவருக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டை மொத்தமாக சொல்வது மூட்டை கட்டி வண்ணானுக்கு அழுக்கு துணி போடுவது கதையாக இருக்கிறது என்று கூறியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

திமுக முகாமில் இருந்து வெளிப்பட்ட இத்தகையை சர்ச்சை பேச்சுகள் சமூக அம்பலப்படுத்தி திமுக சமூக நீதிக்கு எதிராக கட்சி என்று அதிமுக, பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனால், கத்திரி வெயிலில் திமுகவுக்கு குளிர் ஜுரம் அடிக்கிறது. நாவடக்கம் இல்லாத திமுக தலைமை ஜெயிலுக்குப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சமூக வளைதலங்களில் ஆளுங்கட்சியினர் பரபரப்பி வருகின்றனர். 

click me!