திமுக எம்எல்ஏ ஐயப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திமுக எம்எல்ஏ ஐயப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் முதல் அலையை விட 2வது மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
undefined
இந்நிலையில், கடலூர் சட்டப்பேரவை உறுப்பினரான ஐய்யப்பன் (63). தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் கட்சியினருடன் இணைந்து கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் ஐயப்பனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில்;- தனது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நோயை அலட்சியமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.