கருணாநிதி உடல் நிலை... திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு…

 
Published : Dec 17, 2016, 11:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
கருணாநிதி உடல் நிலை... திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு…

சுருக்கம்

திமுக வின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 20 ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் போராசிரியர்  அன்பழகன் அறிவித்திருந்தார்.அந்த கூட்டத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் திமுக வின் செயல் தலைவராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன,

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன,மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்களும் இக்கூட்டத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக  திமுக தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

இதனால் வரும் 20 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த திமுக வின் பொதுக்குழுக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போராசிரியர் க. அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்..

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்