எடப்பாடியாரை இல்லத்திற்கே சென்று சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்: அதிமுக-திமுக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்சி

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2020, 12:12 PM IST
Highlights

அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள்,  மன மாச்சரியங்கள் இருந்தாலும் முதலமைச்சரின் தாயாரின் மறைவையொட்டி அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறியிருப்பது. அதிமுக-திமுக என இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவையடுத்து, முதலமைச்சரை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடியும் முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி, விருதுநகர், நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு ஏன்கனவே திட்டமிட்டிருந்த அரசுமுறைப் பயணத்தை ரத்து செய்துவிட்டு பாதியில் திரும்பினார். சாலை மார்க்கமாக சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்திற்கு திரும்பிய அவர், அங்கு தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தனது தாயாரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றார். 

அதனைத் தொடர்ந்து முறைப்படி காரிய சடங்குகள் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அதனை முடித்துக்கொண்டு சொந்த ஊரான சிருவம் பாளையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை 6 மணிக்கு சென்னை புறப்பட்டார்.  இரவு 9:20 சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே முதலமைச்சரின் தாயாருக்கு அறிக்கையின் வாயிலாக இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிச்சாமியின் இல்லத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அங்க தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி முதலமைச்சருக்கு ஆறுதல் கூறினார். 

தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாளின் திருவுருவப் படத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.ஏற்கனவே தொலைபேசியில் மு.க ஸ்டாலின் முதல்வருக்கு ஆறுதல் கூறி இருந்த நிலையில், இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள்,  மன மாச்சரியங்கள் இருந்தாலும் முதலமைச்சரின் தாயாரின் மறைவையொட்டி அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறியிருப்பது. அதிமுக-திமுக என இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!