மம்தாவின் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு... திறமை இருப்பவர்களை அழைக்கும் ஓ.பி.எஸ்..!

Published : Feb 07, 2019, 04:52 PM ISTUpdated : Feb 07, 2019, 05:55 PM IST
மம்தாவின்  போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு... திறமை இருப்பவர்களை அழைக்கும் ஓ.பி.எஸ்..!

சுருக்கம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. மத்திய அரசுக்கு எதிரான போரில் அவருக்கு நாங்கள் ஆதரவாய் நிற்கிறோம்:

* மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. மத்திய அரசுக்கு எதிரான போரில் அவருக்கு நாங்கள் ஆதரவாய் நிற்கிறோம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். (சூப்பருண்ணே! கேவலம் கூட்டணிக்காக, அந்த மோசடி பிரச்னையில் தர்மத்துக்கு எதிரா போறீங்க. அப்படியே 2ஜி மேல்முறையீடு வழக்கையும் சொல்லி, அதுலேயும் ஆ.ராசாவுக்கு ஆதரவாக நாங்க நிக்குறோமுன்னு சொல்லிடுங்க. அரசியல் அம்சமா இருக்கும்.)

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: மு.க. ஸ்டாலின். (தல செம்ம தல! எதிரிக்கட்சி தலைவியின் மேலேயே இவ்வளவு பாசத்த கொட்டுற நீங்க,  உங்க கட்சியில் கொல்லப்பட்ட தா.கிருட்டிணன், பொட்டு சுரேஷ், சிவகங்கை மாஜி சேர்மன் முருகன், தினகரன் எரிப்பு வழக்கு இதுல எல்லாம் நீதியை நிலை நாட்டாமலா போயிடுவீங்க?)

* தமிழகத்தின் அனைத்து பிராந்திய கட்சிகளும் எங்களுடன் ஒரு கட்டத்தில் கூட்டணி அமைத்த கட்சிகள்தான்: முரளிதர் ராவ். (ராவ் காரு இப்ப என்ன சொல்ல வர்றீங்க? பழைய கதையை பேசிட்டிருந்தா புது அரிசி வேகாது. முடிஞ்சதை நினைச்சு சீன் பண்ணிட்டிருந்தா ‘ஒரு காலத்துல நாங்களும் இந்த நாட்டை ஆண்டவங்கதான்’ அப்படின்னு டயலாக் பேசக்கூடிய நிலைமை வந்துடப்போவுது.)

* திறமை இருந்தால் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்: ஓ.பன்னீர்செல்வம். (நீங்களே சொல்லிட்டீங்கப்பு, பின்னே என்ன டி.டி.வி.பாட்டுக்கு வந்து தேனி, மதர, சிவகங்கன்னு வெளாடிட்டு போவட்டுமே அரசியல்ல.  விஷக்கிருமி! கொள்ளைக்கூட்டம்!ன்னு அவரை ஒடுக்கி ஓரங்கட்டப் பார்க்குறீக?)

* அன்னிய முதலீடு 21 சதவீதமாக குறைந்துள்ளதுதான் அ.தி.மு.க. அரசின் சாதனை. தெருவில் திருந்தவரையெல்லாம் கோட் சூட் மாட்டிவிட்டு உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் உட்கார வைத்துள்ளார்கள்: மு.க. ஸ்டாலின். (தலீவரே! அத மறந்துட்டீங்க....’ஆக இன்றைக்கு ஏதோ வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இதை நான் பேசவில்லை. நான் பொய் பேசமாட்டேன், நான் கலைஞரின் மகன்.’ இதை சொல்ல மறந்துட்டீங்க. அட சொல்லுங்க...இது சரியான டைம், அடிச்சு விடுங்க.)

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!