35 ஆயிரம் ஆண்களுக்கு எல்லோ டீ ஷர்ட் - பெண்களுக்கு சுடி!! திமுகவின் கலரை மாற்றிய செந்தில் பாலாஜி!

By Vishnu Priya  |  First Published Dec 28, 2018, 1:51 PM IST

மச்சம் உச்சத்தில இருந்தால் மிச்சமே வைக்காம அதிர்ஷ்டம் கொட்டும்! என்பார்கள். தி.மு.க.வுக்கு தாவியிருக்கும் செந்தில்பாலாஜிக்கு, ஃபர்ஸ்ட் நிகழ்ச்சி மிக தரமான, சிறப்பான சம்பவங்களாக நிகழ்ந்து அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது என்கிறார்கள்.


மச்சம் உச்சத்தில இருந்தால் மிச்சமே வைக்காம அதிர்ஷ்டம் கொட்டும்! என்பார்கள். தி.மு.க.வுக்கு தாவியிருக்கும் செந்தில்பாலாஜிக்கு, ஃபர்ஸ்ட் நிகழ்ச்சி மிக தரமான, சிறப்பான சம்பவங்களாக நிகழ்ந்து அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது என்கிறார்கள். இவரது புது ஐடியாவினால், ஸ்டாலினும் குஷியாகிவிட்டதால் கரூர் தி.மு.க.வில் செந்தில்பாலாஜியின் கெத்து கரைபுரள ஆரம்பித்துள்ளதாம். 

தினகரனிடமிருந்து விலகி கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி. வெறும் டிரெய்லராக நடந்த அந்த நிகழ்வின் மெயின் பிக்சராக கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் முப்பதாயிரத்து நானூற்று இருபத்தைந்து பேரை தி.மு.க.வில் இணைக்கும் நிகழ்வை நேற்றுன் ஸ்டாலினின்  தலைமையில் கரூர் திருமாநிலையில் நடத்தினார். 

Tap to resize

Latest Videos

இந்த நிகழ்வுக்கு ஆளும் தரப்பு சைடிலிருந்து பெரிய குடைச்சல்கள், எதிர்ப்புகள், கால் வாரல்கள், அனுமதி மறுப்புகள் என்று பெரும் இம்சைகள் கொடுக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி சீற, ‘இதெல்லாம் வெற்று சீன்ஸ்’ என்று கிண்டலடித்தது ஆளும் தரப்பு. 

உண்மையிலேயே பெரும் கூட்டம் கூடியிருந்தது செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு. இதில் மேடையிலிருந்து கீழே சில வரிசையில் பல நூறு பெண்களையும், ஆண்களையும் சீருடையில் அமர வைத்திருந்தனர். அதுவும் ஆண்கள் பளீர் மஞ்சள் நிற டீ ஷர்ட்டும், பெண்கள் மஞ்சள் நிற டாப் மற்றும் கருப்பு நிற ஷால்  ஆகியன அணிந்து அமர்ந்திருந்தனர். இந்த மாஸ் கலர் ஒருவித கெத்தை காண்பித்தது முன்வரிசை கூட்டத்துக்கு. 

தி.மு.க.வின் துவக்க கால நிறம், திராவிட கறுப்பு, அதன் பின் கொடிக்காக சிவப்பை இணைத்தார்கள், பின் கடைசி பதினைந்து வருடங்களாக கருணாநிதி மஞ்சள் நிற சால்வை அணிந்து ஒரு புதிய வர்ணத்தை கட்சிக்கு ஹைலைட்டாக்கினார்.

 ஆனாலும் கருணாநிதியை தவிர வேறு யாரும் மஞ்சளை தொடுவதில்லை. ஆனால் கட்சியில் தொண்டர்களை இணைக்கும் நிகழ்விலேயே செந்தில்பாலாஜி இப்படி மஞ்சளும், கறுப்புமாக ’நம்ம கட்சி கலரையே மாத்திட்டாரேய்யா!’ என்று கூட்ட மேடையில்   இருந்த சீனியர்கள் சிலர் பரபரத்தனர். மேடையில் ஸ்டாலினின் அருகில் அமர்ந்திருந்த நேரு இதை அவரிடம் சுட்டிக்காட்ட, அதன் பின்னரே உன்னிப்பாக கவனித்த ஸ்டாலினின் முகத்தில் ஒரு வித ஆச்சரிய ரேகைகள். 

விழா நிகழ்வு முடிந்து செல்கையில் செந்தில்பாலாஜியிடம் ‘என்ன தம்பி கட்சி கலரையே மாத்துறீங்களா?’ என்று பட்டென கேட்டுவிட்டாராம் ஸ்டாலின். இதற்கு பதில் சொல்லாமல் பதறி நெற்றியை தடவிக் கொண்டாராம் செ.பா! ஆனால் அடுத்த நொடியிலேயே லயித்துச் சிரித்த ஸ்டாலின் ‘கலர்ஃபுல்லா புதுசா இருந்து இருக்குதுய்யா. வழக்கம் போல இல்லாம புதுமையா ஏதாச்சும் பண்ணினால்தான் மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். நமக்கு நாமே! நடந்தப்ப இதை நான் புரிஞ்சுக்கிட்டேன்.’ என்று சொல்ல, செ.பா.வுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டதாம். 

பின் மற்ற சீனியர்கள் பக்கம் திரும்பி, ”இந்த சிஸ்டத்தை நம்மளோட மத்த கூட்டங்கள்ளேயும் ஃபாலோ பண்ணலாம். இளம் உறுப்பினர்கள் நம்மகிட்ட அதிகம் இருக்கிறாங்க அப்படிங்கிறதை இந்த தனித்த கலர்  ஹைலைட் பண்ணி காட்டும்.’ என்றாராம். ஸ்டாலினின் இந்த உத்தரவு அப்படியே அவரது மருமகன் சபரீசனின் கவனத்துக்கு பாஸ் செய்யப்பட, அவரும் ஸ்டாலினின் அரசியல் ஸ்டைலை மாற்றிக் கொண்டிருக்கும் டீமின் கிரியேடீவ் ஹெடுக்கும் இதை பகிர்ந்துவிட்டாராம். 
தன் முதல் நிகழ்ச்சியே கட்சியின் ஸ்டைலில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதை கவனித்தும், ஸ்டாலினின் குஷியை நேரில் பார்த்ததிலும் செந்தில் பாலாஜிக்கு செம்ம சந்தோஷம்.  ச்சும்மாவே கலக்குவாரு, இனி கரூர் தி.மு.க.வில் செந்திலின் அதகளம் அமர்க்களப்படும்.

click me!