திமுக கூட்டணியில் இணைந்த அடுத்த கட்சி !!

By Selvanayagam PFirst Published Feb 22, 2019, 9:09 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில்  இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக  தலைவர்  மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  கட்சித் தலைவர் காதர் மொண்தீன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
 

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ், மதிமுக, இடது நாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதையடுத்து சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக முதலில் வேகமாக தொடங்கினாலும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க முடியாமல் திணறி வருகிறது. அதே நேரத்தில் திமுக கட்சி இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகம் காட்டி வருகிறது 

இந்நிலையில்  திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டு இருக்கிறது. 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக தலைவர் காதர் மொய்தீன், திமுக தலைவர் ஸ்டாலின் இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காதர் மொய்தீன், கூட்டணி இறுதியானது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது சந்தோசம். இதை ஏற்றுக்கொள்கிறோம். திமுக கூட்டணிக்கு நாங்கள் வலு சேர்ப்போம் என்று கூறியுள்ளார்.

click me!